Posts

Showing posts from 2018

ஆடிப்பெருக்கு

Image
ஆடிப்பெருக்கு இன்று வெகு விசேடமாகக் கொண்டாடப்படுகிறது! ஆமாம் ஆனால் இந்நாள் தமிழகத்துக்கு பொதுவானதாகச் சொல்லப்பட்டாலும் காவிரி பாயும் தீரங்களிலும் அதன் உப வடிநிலப்பகுதியிலுமே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது! மதுரைக்குத் தெற்கே ஆடிப்பெருக்கு என்பது ஒரு போதும் பெரியதொரு பண்டிகை போல கொண்டாடப்பட்டது கிடையாது! காரணம் இங்கே நிலத்தின் தகவமைப்பு அப்படி. என்னடா இப்படி சொல்லுதானேனு பாக்கீங்களா? உண்மை தான். காவேரி எங்கே உற்பத்தியாகிறது என்றால் கருநாடக பிரம்மகிரி மலைகளில்! அங்கே வைகாசி தொடங்கி ஆவணி மாதம் வரையிலும் மழை தீவிரமாய் இருக்கும். ஆடி மாதத்தில் உச்சமாய் இருக்கும். அதனை முன்னிட்டே ஆறுகளும் பெருகியோடும் ஆடி மத்தியில். இதையெல்லாம் வைத்து தான் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டிருக்கிறது. கருநாடக மலைகளில் அதன் பின்னர் இராது! அதாவது ஆவணியில் மொத்த மழையும் முடிந்துவிடும். ஆனால் தென்தமிழக நிலப்பகுதிகள் அப்படிப்பட்டவை அல்ல! இங்கே மலையுச்சிகளில் வைகாசியில் தொடங்கும் மழை மார்கழி மாதம் வரை பெய்யும். சமவெளிகளிலோ புரட்டாசி பின்னேரம் துவங்கும் மழை மார்கழி மத்தி வரை நீளும். ஆக இங்கே ஆறுகள் பெருக்கெடுப்பது ஆடிப்ப...

தீ தின்றதன் 15ம் ஆண்டு

Image
சரியாக இதே நேரம் தான். காலை நேர இடைவேளையில் தான் அது தெரியவந்தது. மூன்று மாடிகள் இருந்தன அந்தக் கட்டிடத்தில். ஒரு ஆள் போகலாம் அல்லது வரலாம் அத்தகைய குறுகிய படிக்கட்டு. மதியச் சாப்பாட்டுக்கு உணவு தயாராகிக் கொண்டிருந்தது. யதேச்சையாக இரு பிள்ளைகள் கீழே பார்த்தனர். அடுப்பாங்கரை மேலே இருந்த கூரை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. நிலைமை என்னவென உணர்ந்து தீயணைப்புத் துறை வந்தும் ஒன்றுமியலாமல் போனது அவர்கள் பிரச்சனை இவ்வளவு தீவிரமானதென உணர்ந்திருக்கவில்லை. சிந்திக்கும் சில மணித்துளிகளுக்குள்ளாகவே எல்லாம் நடந்து முடிந்திருந்தது. தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையால் முதலாமதைச் செய்ய இயலவில்லை. மீட்கத்தான் முடிந்தது. 90 பிள்ளைகளைச் சடலமாக!! 54 பிள்ளைகள் தீக்காயங்களோடு மீட்கப்பட்டதில் 4 பேர் உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 94 ஆனது!! தீயின் நாக்குக்கு இரையான அந்த சிறு பிள்ளைகளின் ஆன்மாக்களுக்காவது சாந்தி கிடைத்திருக்குமா என்றால் இல்லையென அடித்துக் கூறலாம்! காரணம் ஒன்று தான்! கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்து மொத்த குற்றவாளிகள் 11 பேரையும் விடுவித்தது சென்னை உயர்நீதிமன்றம்!...

தென்மேற்கு பருவக்காற்று என்ற தென்றல்

Image
இந்திய துணைக்கண்டத்தில் மே கடைசியில் துவங்கி செப்டம்பர் மாதம் வரையிலும் நீடித்து பெய்கிறது தென்மேற்கு பருவக்காற்று உண்டாக்கும் பருவமழை! எங்க ஊர்ப்பக்கம் வைகா...

8ஆம் திருவிழா

ஏட்டி இங்கெனெ வாட்டி! பானாக்காரம் குடி என்று கார் கேட்ட மவளுக்கு பானாக்காரத்தைக் காட்டி திசைதிருப்பிய மரகதம், பானாக்காரத்தையும் மோரையும் இரண்டு பெரிய பாட்டில்க...

சிலோன் ரேடியோ

ஆயுபவன்! என்று தொடங்கி நீளும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மித அலை வானொலி தான் ஒரு காலத்திலே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏகப்பிரபல்யமாய் இருந்தது! இன்ற...

டப்பா

'ஏலேய் அந்த டப்பாவ எடு' என்று ஆச்சி கூப்பிட்டதும் ஓடியாந்தேன். 'ரெண்டு துண்டு கருப்பட்டியும் கொஞ்சம் அடியொட்டிய தூளுமா கிடந்தது'. அந்தப் டப்பாவ மட்டும் ஆச்சி பத்திர...

பெண்ணும் திராவிடமும்

மார்ச்சு 8 - உலக பெண்கள் தினம் வழக்கம்போல் சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்படும் தினங்களுள் ஒன்று. அதைத் தாண்டி என்ன அங்கீகாரம் அந்த தினத்திற்கு அல்லது அந்தப் பெண்ணின...

வியப்பு

நண்பனொருவன் கேட்டான் நிலையாகப் போட்ட சங்கப்பாடலின் பொருள்குறித்து/ பொருள் குறித்து வருவதல்ல காதல், செம்புலப்பெயல் நீர் போல அன்புடைநெஞ்சங்கள் தாம் கலந்ததால் வர...

இகழ்தலும் இலமே

Image
பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192) - கணியன் பூங்குன்றனார் இங்கே ஒரு பிரச்சினை பல பிரச்சினைகளுக்கான விதையாகிவிடுகிறது. #நாச்சியாரை நடுவீதியில் நிறுத்தி நாறடித்துவிட்டார்கள். #போகட்டும். #அதையே சாக்காக வைத்து நம்முடைய வெறுப்பையெல்லாம் உமிழ்வது என்பது அபத்தமானது, ஆபத்தானது. தமிழ்பேசும் பார்ப்பனர்களை(பிராமணர்களை)  ஒட்டுமொத்தமாக குற்றஞ்சுமத்துவது என்பதும் தவறான ஒன்றாகவே நான் பார்க்கிறேன். சமுக நீதிக் கருத்துக்களை, திராவிடச் சிந்தனைகளை ஒருங்கே கொண்டவர்களும் பார்ப்பனர் வகுப்பிலிருந்து வந்திருக்கிறார்கள். சமீபத்திய உதாரணமாக டி.எம்.கிருஷ்ணா அவர்களைக் கூறலாம். எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் மூலம் பல தமிழ்க்கீர்த்தனைகளை எழுதச் செய்து அவற்றை மேடையேற்றிவருகிறார். கருநாடக இசையை ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மட்டும் பயின்று பயிற்றுவித்துக் கொண்டிருக்கும் நிலையை மாற்ற பெருமுயற்சி எடுத்து வருகிறார். அண்மையில் பேருந்தில் பரதநாட்டியத்தை அரங்கேற்றம் செய்ய வைத்து வெகுமக்கள் கலையாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இது ஒரு சான்று தான். இந்து எ...