ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு இன்று வெகு விசேடமாகக் கொண்டாடப்படுகிறது! ஆமாம் ஆனால் இந்நாள் தமிழகத்துக்கு பொதுவானதாகச் சொல்லப்பட்டாலும் காவிரி பாயும் தீரங்களிலும் அதன் உப வடிநிலப்பகுதியிலுமே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது! மதுரைக்குத் தெற்கே ஆடிப்பெருக்கு என்பது ஒரு போதும் பெரியதொரு பண்டிகை போல கொண்டாடப்பட்டது கிடையாது! காரணம் இங்கே நிலத்தின் தகவமைப்பு அப்படி. என்னடா இப்படி சொல்லுதானேனு பாக்கீங்களா? உண்மை தான். காவேரி எங்கே உற்பத்தியாகிறது என்றால் கருநாடக பிரம்மகிரி மலைகளில்! அங்கே வைகாசி தொடங்கி ஆவணி மாதம் வரையிலும் மழை தீவிரமாய் இருக்கும். ஆடி மாதத்தில் உச்சமாய் இருக்கும். அதனை முன்னிட்டே ஆறுகளும் பெருகியோடும் ஆடி மத்தியில். இதையெல்லாம் வைத்து தான் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டிருக்கிறது. கருநாடக மலைகளில் அதன் பின்னர் இராது! அதாவது ஆவணியில் மொத்த மழையும் முடிந்துவிடும்.
ஆனால் தென்தமிழக நிலப்பகுதிகள் அப்படிப்பட்டவை அல்ல! இங்கே மலையுச்சிகளில் வைகாசியில் தொடங்கும் மழை மார்கழி மாதம் வரை பெய்யும். சமவெளிகளிலோ புரட்டாசி பின்னேரம் துவங்கும் மழை மார்கழி மத்தி வரை நீளும். ஆக இங்கே ஆறுகள் பெருக்கெடுப்பது ஆடிப்பெருக்கில் என்று சொல்லுவதற்கு வழியில்லை! காலமாற்றத்தில் பண்டிகைகள் பொதுப்படுத்தப்பட்டாலும் சில உண்மைகளை நாம் அறிந்து கொள்ள வேணும்.
வடவர்கள் அதாவது வட இந்தியா, ஐரோப்பாவில் இருப்பவர்களெல்லாம் நெருப்பையும், கோடையையுமே கொண்டாடுவார்கள்! அவர்களுக்கு அது தேவையாயிருக்கிறது. தெற்கிலுள்ளவர்களுக்கு நீரும் குளிருமே கொண்டாட்டத்துக்குரியது! ஏனென்றால் நில தகவமைப்பு அப்படியாப்பட்டது.
படம்: பூலாம்பட்டியில் காவிரி ஆறு!

Comments
Post a Comment