தீ தின்றதன் 15ம் ஆண்டு
சரியாக இதே நேரம் தான். காலை நேர இடைவேளையில் தான் அது தெரியவந்தது. மூன்று மாடிகள் இருந்தன அந்தக் கட்டிடத்தில். ஒரு ஆள் போகலாம் அல்லது வரலாம் அத்தகைய குறுகிய படிக்கட்டு.
மதியச் சாப்பாட்டுக்கு உணவு தயாராகிக் கொண்டிருந்தது.
யதேச்சையாக இரு பிள்ளைகள் கீழே பார்த்தனர். அடுப்பாங்கரை மேலே இருந்த கூரை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. நிலைமை என்னவென உணர்ந்து தீயணைப்புத் துறை வந்தும் ஒன்றுமியலாமல் போனது அவர்கள் பிரச்சனை இவ்வளவு தீவிரமானதென உணர்ந்திருக்கவில்லை. சிந்திக்கும் சில மணித்துளிகளுக்குள்ளாகவே எல்லாம் நடந்து முடிந்திருந்தது.
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையால் முதலாமதைச் செய்ய இயலவில்லை.
மீட்கத்தான் முடிந்தது. 90 பிள்ளைகளைச் சடலமாக!!
54 பிள்ளைகள் தீக்காயங்களோடு மீட்கப்பட்டதில் 4 பேர் உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 94 ஆனது!!
தீயின் நாக்குக்கு இரையான அந்த சிறு பிள்ளைகளின் ஆன்மாக்களுக்காவது சாந்தி கிடைத்திருக்குமா என்றால் இல்லையென அடித்துக் கூறலாம்!
காரணம் ஒன்று தான்!
கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்து மொத்த குற்றவாளிகள் 11 பேரையும் விடுவித்தது சென்னை உயர்நீதிமன்றம்! சாட்சியங்கள் இல்லையாம்.
இதற்கான பதில் 94 உயிர்களிடமிருக்கிறது!
இன்னும் நாம் திருந்தியதாகத் தெரியவில்லை. இன்னுமொரு விபத்து நடந்தால் திருந்துவமா என்பதும் உறுதியில்லை.
ஜூலை 16, 2004 - கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த நாள்.

Comments
Post a Comment