பொங்கல் கொண்டாட்டங்கள்
தமிழர் திருநாள், தைத்திருநாள், தைப் பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு என்னும் பெயர்களில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை குறித்து எங்கள் பகுதிகளில் நிலவும் வழக்காறுகள் குறித்த பதிவு.... பொதுவாக கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி பிறந்தவுடனே பொங்கலுக்கான முன்னோட்ட ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிடும். வீட்டுக்கு வௌ்ளையடிப்பது, அத்தோடு ஒரு வருடமாக விளக்கவே செய்திராத பாத்திரங்களை (ஆலங்காலில் இருக்கும் பித்தாளை மற்றும் செம்பு பாத்திரங்களை ) கழுவிப் பெறக்கி எடுத்து வைப்பார்கள். பிறகு அடுத்த பொங்கலுக்கு தான் அவை வௌியே வரும். மார்கழித் திருவாதிரைக்கு அப்புறம் கொஞ்கம் ஏற்பாடுகள் தீவிரமாகிவிடும்...திருவாதிரை சாமி பார்த்துவிட்டு வரும் போது கூடவே கரும்பும் வாங்கிவரும் பழக்கம் எங்க ஊரில் இன்றும் இருக்கிறது. வௌ்ளையடித்த மீத சுண்ணாம்பை பத்திரமாக எடுத்து வைத்து பொங்கல் அடுப்புகளை வௌ்ளையடிக்க வைத்துக் கொள்வர். சிலரின் வீடுகளில் ( குறிப்பாக திருமணப் பருவத்தில் இருக்கும் பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டின்) கோலங்களில் சாணி வைத்து பூசணிப் ப...