8ஆம் திருவிழா
ஏட்டி இங்கெனெ வாட்டி! பானாக்காரம் குடி என்று கார் கேட்ட மவளுக்கு பானாக்காரத்தைக் காட்டி திசைதிருப்பிய மரகதம், பானாக்காரத்தையும் மோரையும் இரண்டு பெரிய பாட்டில்களில் அடைத்துக் கொண்டு வெளையாட்டுச் சாமானெல்லாம் விக்காத செக்கடித்தெரு முக்குக்கு வந்து நின்றுகொண்டாள்;
குடம் ஆத்துல இருந்து கிளம்பியிருந்தது! குத்துக்கல்லுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் நமஸ்காரம் போட ஆள்கள் ஆரம்பிப்பாங்க என்பதால் செக்கடித் தெரு முக்கிலேயே நின்றுகொண்டாள் எட்டு வயசு மவ முப்பிடாதியோடு!
குடமும், கெண்டியும் போன பின் நமஸ்காரம் போட ஆம்பளைகளும், பொம்பளைகளுமா அந்த எடம் நெருக்கப்பட்டது! வீசாறி வைத்திருந்த மக்களும் ஒரு பக்கம் என ஜன நெருக்குதலால் ஒரு மாதிரித் தான் இருந்தது அவ்விடம்.
எங்கே ஆள்கள் பாத்தா எதுவும் கேட்ருவாங்களோனு முக்காடும் போட்டே நின்றாள்! விதி விட்டதா? ஏய், மரகதம் வீட்டுக்காரர எங்க? என்று குரல் கேட்ட திசையை நோக்கிக் கூடத்திரும்பாமல் மேக்காம சந்தைமடத்தெருவில் விரசலானாள்!
Comments
Post a Comment