இதுலாம் பழசப்பா
மாதம் பங்குனி என்பதால் பல நினைவுகள் சுற்றுகின்றன.... மனதுக்குள்! என்னதான் வெயில் எல்லா ஊர்லயும் அடிச்சாலும் நம்ம ஊர்ல கூட ரெண்டு டிகிரி சேர்ந்து அடிக்கோங்க மாரி தான் எங்களுக்கு தோணும், வெள்ளாமைலாம் முடிஞ்சு வயல்காடுகளெல்லாம் கிடைக்கு விடுத நேரம்- அப்படி கிடைக்கு விடாத வயகாடுலாம் விளையாட்டுக் காடா மாறிரும். பத்து பன்னிரண்டு படிக்க பிள்ளைகள் தவிர்த்து மத்த பிள்ளைகளுக்குலாம் இப்ப இருந்தே ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு வந்துரும் அதுவோ. பரீட்சை பத்தி கூடும் பிள்ளையள் அதிகம் நினைக்காதுவோ ஆனா அடுத்து வார கோடை லீவுக்கான திட்டம் போட ஆரம்பிச்சுரும். ஆச்சி வூட்டுக்கு போலாமா இல்ல அத்தை வூட்டுக்கு போலாமாங்க மாரியான திட்டம்லாம் போட்டு ரெடியாயிரும். வீடுகள்ல பங்குனி உத்திரக் கொடைக்கு வெட்டதுக்கு உண்டான கிடாய் லாம் கொழு கொழுனு வளர்ந்து ரெடியா நிக்கும். உத்தரம் முதப்புல வந்தா அவ்வளவு சந்தோஷம் இருக்காது பிள்ளையளுக்கு, மாசக் கடசில வந்துட்டுனா சந்தோஷப்படுங்க. லீவு வுட்டுட்டா போதும் ஆத்துலயும், காய்ஞ்ச வயக்காட்டுலயும் தான் அதுவோ கிடக்கும். காலைலயும், சாந்திரமும் ஆத்தங்கரையும், படித்துறையும் ரொ...