சொக்கப்பனையும் திருக்கார்த்திகையும்
திருக்கார்த்திகை என்று சொல்லப்படும் திருவிழா குறிப்பாக தமிழர்க்கே உரியதாகும். ஆதி காலத்து தமிழர்களான மலையாள மக்களும் இந்த திருநாளை வெகு சிறப்பொடு கொண்டாடுகின்றனர். கார்த்திகை மாதத்து முழுநிலவும் கார்த்திகை நாள்மீனும் சேர்ந்து வரும் நாளாகும்.இந்தியாவெங்கும் தீபாவளி அன்று விளக்கீடு செய்வது வழக்கம். ஆனால் தமிழகம் மற்றும் கேரளத்தில் மட்டும் திருக்கார்த்திகை தினத்தன்று விளக்கீடு செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இத்திருநாளுக்கு சங்க காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டதற்கான சான்று உள்ளது. பின்வரும் பாடல்கள் மூலமாக அறியலாம். வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின் வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக் கையற வந்த பொழுது – நற்றிணை 58 கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் சீர்த்து விளங்கித் திருப்பூத்தல் – பரிபாடல் திரட்டு 10 வீடெங்கும் விளக்கேற்றி மழைக்காலம் முடிவத்தையும் பனிக்காலத்தையும் வரவேற்குமுகமாக கொண்டாடப்படுகிறது. ...