Posts

Showing posts from March, 2020

பெண்கள் நாள்'20

12/14 வயதில் திருமணம், 16/18 வயதில் பிள்ளை, அதுவும் டஜன் கணக்கில், வீட்டுக்காரர் பெயர் சொல்லக்கூடாது, யாரையும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது, வெளியே செல்லக்கூடாது, சொத்துரிமை கிடையாது, கணவன் இறந்தால் உடன்கட்டை(வடநாடு), கணவன் இறந்தால் ஒரு வருடம் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, வெள்ளைச்சீலை தான் இறக்கும் வரை, 15/16 பெண்கள் பலர் பொட்டுக்கட்டி 'தேவடியார்கள்' ஆக்கப்பட்டது, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் மார்பை மறைக்கக்கூடாது-மேல்சீலை அணியக்கூடாது, அடுப்பாங்கரைக்கும், அங்கணத்துக்குமிடையே ஒரு இருண்ட வாழ்க்கை, வீட்டை தூக்க, துடைக்க, கழுவ, சமைக்க என இதுவும் ஒரு பொழப்பாக வாழ்க்கை!  மேலும் கேட்டால் நாங்கள் பெண்களைத் தெய்வமாக வழிபடும் கலாச்சாரம் கொண்டவர்கள்!  இந்த கலாச்சாரம் மயித்த பெருமை கொள்ள ஒரு கூட்டம்!  தமிழரின் பண்பாட்டில் பெண்கள் இழிநிலைக்கு உட்படுத்தப்படவில்லை. கல்வி அறிவு பெற்றிருந்தனர். வீரப்பெண்மணிகளாக இருந்தனர். புலியை முறத்தால் அடித்து விரட்டியதாக சங்ககால மகளிரைப் பற்றி புறநானூறு பேசுகிறது. ஆக, இடையிலே வந்த பார்ப்பன ஆரிய வைதீக மதம் இந்த அநீதிகளை பெண்களுக்கு இழைக்...