தசரா
தசரா என்றவுடன் நமக்கு முதலில் நி னைவுக்கு வருவது மைசூர் அதுக்குப் பொறவு நம்ம குலசேகரப்பட்டினம் அதேபோல விமரிசையாக நெல்லை டவுண் மற்றும் பாளை சுற்றுவட்டாரங்களிலும் கொண்டாடப்படுவது பலர் அறிந்திராததாகும். நெல்லை டவுணில் 15 சப்பரங்கள் அணிவகுப்பும் , பாளையில் 12 சப்பரங்களின் அணிவகுப்பும் நடைபெறுவது வழக்கம். இத்தனை சப்பரங்கள் ஒரே இடத்தில் அணிவகுப்பது வேறெங்குமில்லாதது ஆகும். தசரா விழாவைப் பற்றி எங்க எதித்த வீட்டு சங்கர் மாமா கூறியதை தங்களிடம் கூறுகிறேன் அக்காலத்தில் இப்போது உள்ளது போலில்லாமல் வெகு விமரிசையாக தசரா கொண்டாடப்படுமாம்.8ம் திருவிழாவின் போது பூம்பல்லாக்குகளின் அணிவகுப்பும் நடைபெறுமாம். தசரா அன்று இடம்பெறும் சப்பர அணிவகுப்பே ஒரு போட்டி போல தான். ஒவ்வொரு கோயில் சப்பரமும் அதுக்கு போட்டியாக இது, இதுக்கு போட்டியாக அது என்று சொல்லத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒலி ஔி அமைப்பு ஏற்பாடு செய்யும் சீரியல் செட்டுக்காரர்கள் தங்களுடைய தொழில் போட்டியையும் திறமையையும் வௌிப்படுத்...