Posts

Showing posts from October, 2022

தீபாவளி - தமிழர் விழாவா?

Image
தீபாவளி - திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கும் பகுத்தறிவாளர்களுக்கும் என்றுமே சர்ச்சைக்குரிய ஒரு விழா ஆகும். இந்த பண்டிகை குறித்து பல கதைகள் சொல்லப்பட்டாலும் அது எதற்குமான உறுதியான சான்றுகள் என்பது இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இந்து என்று சொல்லப்படக்கூடிய மதத்தின் பல பிரிவுகளை சேர்ந்த மக்களும் சமண மதத்தைச் சார்ந்தவர்களும் இதை கொண்டாடுகின்றனர். அத்தோடு சில இடங்களில் தீபாவளிக்கு முன்பு பின்பு வேறு சில பூஜைகள் போன்ற விழாக்களும் சேர்ந்து கொள்கின்ற காரணத்தினால் நம் நாட்டின் பெரிய திருவிழாவாக அடையாளம் காணப்படுகிறது. நாடு முழுமைக்கும் கொண்டாடப்படுவதாக தீபாவளி சொல்லப்பட்டாலும் அது உண்மையில் வட இந்திய பண்டிகையே!  பல்வேறு நாடுகளில் தீபம் ஏற்றும் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்தியாவிலும் அதே போன்ற தீபம் ஏற்றக்கூடிய பண்டிகை தான் தீபாவளி; ஆனால் அது வட இந்தியாவில். மேலும் ஒரு தீபம் ஏற்றும் பண்டிகை தென்னிந்தியாவில் கொண்டாடப்படுகிறது - அது திருக்கார்த்திகை தினத்தில்! தமிழகம், கேரளம், ஆந்திரம், தென் கர்நாடகம் மற்றும் ஒடிசாவில் திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்றப்படுகிறது. வடகர்நாடகத்திலும் மற்...