கொடைவிழாவும் வில்லிசையும்
கொடைவிழா - என்றாலே தென் மாவட்டங்களில் வெகு விமரிசையாக கோவில்களில் கொண்டாடப்படுவது வழக்கம். பொதுவாக சைவ ( பலி பூசை இல்லாத ) கோவில்களில் கொடியேற்றி நடைபெறுவது திருவிழா என்றும் அசைவ ( பலி பூசை நடைபெறும் ) கோவில்களில் நடைபெறுவது கொடை விழா என்றும் அழைக்கப்படுவது நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் வழக்கம். அப்படியான கொடை விழாக்களில் தவறாமல் இடம்பெறுவது வில்லிசை எனப்படும் வில்லுப்பாட்டு ( வில்லடிச்சான் பாட்டு எனவும் அழைக்கப்படும்). அதே நேரம் சில சுடலை மாடன் கோவில்களில் கணியான் கூத்து இடம்பெறும். வரலாறு : போர் முடித்து வந்த வீரர்கள் தங்களின் கையில் இருந்த வில்லை அடித்தபோது அது ஒரு விதமான ஓசை கிளம்பியதாகாவும் அதுவே வில்லிசையாக பின்னலில் உருவானதாகவும் இலக்கியங்கள் சொல்லுகின்றன. வில்லுப்பாட்டில் வில்லு , குடம், கட்டை , ஜால்ரா, உடுக்கு, வீசுகோல் முதலியவை பயன்படுத்தப்படும். வில்லிசை யானது...