Posts

Showing posts from February, 2021

ஆச்சியும் கொடையும்!

இன்றைக்கு இருக்கும் சிறார்களுக்கு எல்லாம் எங்களைப் போன்ற ஒரு இளம் பருவம் கிடைத்திருக்குமா என்றால் அது ஐயமே! ஒவ்வொரு விடுமுறையின் போதும் ஆச்சி வீட்டுக்கு செல்வதோ அத்தை வீட்டுக்கு செல்வதோ சித்தப்பா வீட்டிற்கு செல்வதோ அக்கா வீட்டிற்கு செல்வதோ மிகவும் அலாதியான ஒரு அனுபவம்.  திறன்பேசி எல்லாம் அறிமுகமாகி இருக்காது அந்த காலகட்டத்தில் எங்களது இளம் பருவம் எந்தவித கவலையும் இன்றி துள்ளி பறந்து திரியும் ஒரு பறவையைப் போல தான் இருந்தது.  இன்றைக்கு இருப்பதை போல கோடிங் வகுப்புகளோ திறன் வகுப்புகளோ கோச்சிங் வகுப்புகளோ இல்லாத விடுதலை காலம் அது.  காலையிலேயே இட்லியோ சோறோ பொங்கி எடுத்துக்கொண்டு ஆற்றில் குளித்து மத்தியானம் வெயிலில் பாறையில் அமர்ந்து நாங்கள் உணவருந்திய அந்த நாட்கள் எல்லாம் இப்பொழுது நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு முறை வண்டி மறிச்சான் கோவில் கொடைக்கு செல்லும் பொழுது சம்படத்தில் அடைத்து தரும் கொழுக்கட்டையை நினைக்கும் போது நாக்கில் எச்சில் ஊறுகிறது. ஒரு நாள் அட்டெண்டன்ஸ் போயிரும் என்று சாயந்தரம் கிளம்பி சென்று மறுநாள் காலை முதல் பஸ் ஏறி காலை 9 மணிக்கு பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி விட...