Posts

Showing posts from October, 2015

தசரா

Image
தசரா    என்றவுடன் நமக்கு முதலில்  நி னைவுக்கு வருவது  மைசூர் அதுக்குப் பொறவு நம்ம குலசேகரப்பட்டினம் அதேபோல விமரிசையாக நெல்லை டவுண் மற்றும் பாளை சுற்றுவட்டாரங்களிலும் கொண்டாடப்படுவது பலர் அறிந்திராததாகும். நெல்லை டவுணில் 15 சப்பரங்கள் அணிவகுப்பும் , பாளையில் 12 சப்பரங்களின் அணிவகுப்பும் நடைபெறுவது வழக்கம். இத்தனை சப்பரங்கள் ஒரே இடத்தில் அணிவகுப்பது வேறெங்குமில்லாதது ஆகும்.             தசரா விழாவைப் பற்றி எங்க எதித்த வீட்டு சங்கர் மாமா கூறியதை தங்களிடம் கூறுகிறேன் அக்காலத்தில்  இப்போது உள்ளது போலில்லாமல் வெகு விமரிசையாக தசரா கொண்டாடப்படுமாம்.8ம் திருவிழாவின் போது பூம்பல்லாக்குகளின் அணிவகுப்பும் நடைபெறுமாம். தசரா அன்று இடம்பெறும் சப்பர அணிவகுப்பே ஒரு போட்டி போல தான். ஒவ்வொரு கோயில் சப்பரமும் அதுக்கு போட்டியாக இது, இதுக்கு போட்டியாக அது என்று சொல்லத்தக்க  வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒலி ஔி அமைப்பு ஏற்பாடு செய்யும் சீரியல் செட்டுக்காரர்கள்  தங்களுடைய தொழில் போட்டியையும்  திறமையையும் வௌிப்படுத்...

தலையணை

Image
      தலையணை என்றவுடன் நம் நினைவுக்கு முதலில் வருவது பாவநாசம் தான்.   எங்க ஊர்ப்பக்கமும் அப்படி ஒரு இடம் உள்ளது. ஆனால் அதைப்  போல நீர் வளம் மிகுந்த இடம் அல்ல, மழை பெய்தால் நீர் தளும்பி வரக்கூடியதாகும் .      வாருங்கள்  அங்கே ஒரு ரவுண்டு  போய்ட்டு வரலாம்... கொல்லம் - திருமங்கலம்  தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது வாசுதேவநல்லூர் என்னும் சிற்றூர். அங்கே இருந்து  மேற்கே 8 கி.மீ. பயணித்தால் ( பஸ் எல்லாம் கிடையாது  வண்டியில இல்ல  ஆட்டோல தான் போவனும்) வரும் தலையணை. போகும் வழியில் தரணி சர்க்கரை ஆலை, தரணி பன்னாட்டுப் பள்ளி, தொழிற்பயிற்சி நிலையம், பொறியியற் கல்லூரி எல்லாம் உள்ளன. தலையணையை  அடைந்தவுடன் காட்டிலாகாவின்  சோதனைச் சாவடி உள்ளது.அவ்வழியே  முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே அநுமதி என்பதால் அதனையொட்டி அமைந்துள்ள இறக்கத்தின் வழி கீழிறங்கியது.. வண்டி.  அரை கி.மீ தூரம் மண்சாலையில்  சென்றால் வருகிறது  ஆற்றங்கரை. தௌ்ளத் தௌிந்து ஓடிகிறது ஆறு.. கூழாங்கற்களும் மணலும் நிரம்பி உள்ளன..   தண்ணீரோ ...

முத்தமிழ் விழா - '15

Image
கல்லூரி  வரலாற்றில் அரங்கம் தழுவிய ஆர்ப்பரிப்புகள் அத்தனைக்கும் நடுவே அடங்காத என் மனத்தீ ! வாய்ப்புகள் வசதிகள் வராமலே வாடிய முகங்கள் வந்ததை வாழ்வின் வெற்றியாக மாற்றிய பிஞ்சுகள் ஒன்றும் இல்லாதபோதே  ஒன்றுக்கும் குறைவில்லாத திறமை ஒன்றுக்கும் குறைவில்லாத  போது  ஒன்றும் இல்லாத நாம் எங்கே?? அவர்கள்  கண்களில் தான் குறையே ஒழியே பார்க்கும் பார்வையில் இல்லை தாயின் அரவணைப்பைக் காணாத தந்தையின் பாசத்தை அனுபவித்திடாத பிள்ளைகள் - அதனால் என்ன எங்களுக்கு ஆச்சிகளும் அண்ணாச்சிகளும் இருக்கிறார்கள்  என்கிறார்களோ ? "கொலை வாளினை எடடா " என்ற பாரதிதாசனின் வரி மின்னி மறைகிறது .. இந்த பிள்ளைகளை இல்லை  இல்லை  பிரம்மக்களை  விட்டு விட்டுச் சென்ற மடமாக்களை  எண்ணித் தானோ  ?