Posts

Showing posts from 2017

திருச்சீரலைவாய் ​தொடர் -1

Image
சில விசயங்கள் வெறும் செய்தியாக விட்டு விடாமல் அதிலுள்ளே இருக்கும் உண்மைப் பொருளைக் கொண்டு வர சில ஆராய்ச்சிகள் தேவை. திருச்செந்தூர் - தமிழ்நாட்டில் பிரபலமான ஊர். இங்கு இருக்கும் முருகப்பெருமான் செந்திலாண்டவர் அல்லது சுப்பிரமணியர் என்னும் திருப்பெயர் தாங்கி வீற்றிருக்கிறார். இவருக்கும் தமிழ் வரலாற்றுக்கும் என்ன சம்பந்தம்? இது அறிவுசார் நோக்கில் எழுதப்பட்டிருப்பது - வெற்று நம்பிக்கைகளை புறம் தள்ளி சற்று அதனுள்ளே புதைந்து கிடக்கும் சில உள்ளார்ந்த விடயங்களினூடாக புரிவோம். 'சேயோன்' அல்லது முருகன் என்று அழைக்கப்படும் கடவுள் சங்க இலக்கியங்களில் குறிஞ்சி நிலத்துக்குரிய 'கடவுள்' ஆவார். அதுமுதல் கொண்டு 'குன்றுதோறாடல்' என்னும் கூற்றைத் தொடர்புறுத்திப் பார்க்கலாம். அங்கே ஒரு இணைப்பு இருக்க வாய்ப்பு அதிகமிருக்கிறது. ஆனால் திருச்செந்தூர் இருப்பதோ கடற்கரையில்! பின்னெப்படி முருகப்பெருமான் கோவில்??          கௌமாரம் என்னும் சமய அமைப்பை அறியாத நிலையிலேயே முருகனைத் தமிழர் தொன்று தொட்டு குறிஞ்சி நிலக் கடவுளாக வணங்கி வந்துள்ளனர். அவன் போரிற் சிறந்த திராவிடத் ...

ஆசிரியர் தினம்'17 - தொடர் பதிவு 1

Image
ஆசிரியர் தினம்'17 சிறப்பு தொடர் பதிவு: 'என்னைச் செதுக்கியவர்கள்' வாழ்க்கையில் அனைவருக்கும் ஆசிரியர் ஏதோ ஒருவகையில் இருக்கிறார்கள். அது தொழில் ரீதியாகவோ அல்லது கல்வ...

தண்பொருநை தொடர் -1

Image
 'தன் பொருநை’, ‘பொருநை’, 'தன்பொருநல்’, ‘வண்பொருநல்’, 'தண்பொருத்தம்',  'தண்பொருநை', 'தாமிரபரணி' , 'தாம்பரபரணி', தாமிரவருணி எனப் பலப்பலப் பெயர்களால் அழைக்கப்படும்  எம் அன்னை தாமிரபரணி தாயவளைப் பற்றி எழுத வேண்டும் என்பது நீண்ட நெடுநாளைய விருப்பம். இப்போது நனவில். தாமிரபரணி -  தமிழகத்தில் பிறந்து தமிழகத்திலேயே கடலில் கலக்கும் வற்றாத அரிய நதி. தமிழர்களின் உணர்வுடன் கலந்துவிட்ட ஜீவ நதி. திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களின் வாழ்வோடு பிணைந்துவிட்ட தாய் நதி. நதியின் ஒவ்வொரு துளியிலும் வழிகிறது அன்பு. நதியில் கை நனைக்காமல் ஒருநாளையும் தொடங்குவதில்லை அந்த மக்கள். உலகமே சுற்றி வந்தாலும் ஊர் தண்ணீரை குடித்தால்தான் தாகம் தணிகிறது அவர்களுக்கு. உலகப் புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா தொடங்கி பத்தமடை பாய் வரை தாமிரபரணி தண்ணீர் இல்லாமல் சாத்தியம் இல்லை. தாமிரம் கலந்த தாமிரபரணியின் தண்ணீருக்கு தனித்தன்மை இருக்கிறது என்பது அறிவியல்பூர்வமான உண்மை. இன்றைக்கும் தாமிரபரணியின் தண்ணீரை வெளியூர்களுக்கு வரவழைத்து அல்வாவும் பிரியாணியும் தயாரிக்கும் உணவுக் கடைகளே அதற்க...

நவம்பர் 13, 1992

Image
             நவம்பர் 13, 1992ஆம் ஆண்டு நள்ளிரவு - விடியவே விடியாத என்று எண்ணும்  வகையில் ஏக்கத்தை உண்டு பண்ணிய திகில் இரவு. மழை என்றால் அது தான் மழை - விடாத அடை மழை. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாற்றை புரட்டிப்போட்ட 1992-ஆம் ஆண்டு பெருவெள்ளம்  தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் அணைகள் உள்ள மாவட்டம் திருநெல்வேலி. இங்குள்ள 11 அணைகளில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போதெல்லாம் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் தாமிரபரணி கரையோர குடியிருப்புகளையும், வயல்களையும், தாழ்வான இடங்களையும் வெள்ளநீர் சூழ்வது வழக்கமாக நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், 1992-ம் ஆண்டில் இந்த மாவட்டங்கள், அதற்கு முன் இல்லாத வகையில் கடும் வெள்ளப் பாதிப்புகளை சந்தித்தது. 1992-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புயல்வெள்ளம் ஏற்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி பாபநாசம் அணைப் பகுதியில் 310 மி.மீ. மழையும், சேர்வலாறு அணைப் பகுதியில் 2...

முகைத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்

Image
"வேய்  தூங்குறீரா… எறங்கும். பொட்டல்புதூர் வந்தாச்சு வேய்… ‘- கண்டக்டர் உசுப்ப, தட தடவென கீழே இறங்குகிறேன்.  எதிரிலேயே பள்ளிவாசல். அண்ணாந்து பார்க்கிறேன். பார்வை போகுந்தூரம் வளர்ந்தவாறு மேலே மேலே போயிற்று பள்ளிவாசல் மினாரா. மெல்ல நடக்கிறேன். புறாக்கள் முகத்துக்கு நேரே மறிப்பது போல, மாறி மாறிச் சிறகடிக்கின்றன. படி தாண்டி, பள்ளிவாசலுக்கு உள்ளே, கல்தரையில் கால்வைக்க, ‘சுரீல் ‘ என ஏதோ ஒன்று, கால்நுனிவழியே மேலேறி, கபாலத்தை தாக்கிற்று. பள்ளிவாசலில், தலை தாழ, கூனிக் குறுகியபடி. மனித உருவங்கள் ஆங்காங்கே திட்டுதிட்டாய் உறைந்து கிடக்கின்றன. எத்தனையோ மனிதர்களின் உள்மன ரகஸ்யங்களை, அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்க் கதைகளை, குற்ற உணர்வில் குமைந்து சிதறிய   பெருமூச்சுக்களை எல்லாம்-  காலா காலமாய் உறிஞ்சி உள்வாங்கி, பள்ளிவாசல் இருளோடு கலந்து, ஸ்தம்பித்து நின்ற காற்று, மெல்ல அசைகிறது. அ.. என்ன இது..? என் தலையைச் சுற்றிச் சுற்றியே ஹூ ஹூ வென் ஓலமிடுகிறதே.. ஊழிக்காற்றா இது..?  உள் பள்ளி வாசலில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் சுடரை, பார்வை எதேச்சையாய்த் தொட- ஐயோ… ஐயோ.. தீ ஜு...

பாகுபலி - பலியாகிப் போன சிவகாமி

Image
            ஒரு படம் பார்க்கிறோம். பார்க்கிற ஒவ்வொருவருக்கும் ஒருமாதிரியான கண்ணோட்டம் உண்டு - படம் பற்றி - அதன் கதையம்சம் பற்றி. பாகுபலி-2  பலருக்கும் படம் பார்க்கும்போது பாகுபலியே மனதில் வட்டமடிப்பார். எனக்கு ராஜமாதா -சிவகாமி தேவியும் அவருடைய ஆளுமையும் தான்.  ஒரு பெண்ணிற்கு முக்கியத்துவம் வாய்ந்த அரச பதவிகளை எல்லாம் ஆரியச் சமூகத்தில் கொடுக்கப்பட்டது இல்லை.  பெண்ணை சரிக்கு நிகர் சமானம் வைத்தது திராவிடக் கலாச்சாரத்தில்​தான். பாகுபலி படத்தில்  ராஜமாதாவாக சிவகாமி தேவி ஒரு தேசத்தைச் சீரும் சிறப்புமாக 25 ஆண்டுகாலம்​ ஆண்டதோடு அடுத்தடுத்த அரசர்களை நியமனம் செய்வதிலும் அவருக்கு இருந்த செல்வாக்கு சிதறடிக்கமுடியாதது. அது பண்டைய திராவிட அரசமைப்பில் பெண்களின் பாத்திரத்தை விவரமாக விளக்குகிறது. அதோடு நில்லாமல் யுவராணியான தேவசேனை மாமன்னர்கள், இளவரசர்களோடு போர் புரிய விரும்பும் மறப்பெண்ணாகவே இருக்கிறாள். இதுதான் திராவிட நாகரிகம். பெண்ணோடு ஆண் போட்டியிடுவது இழிவன்று. இயற்கை. தமிழ்நாட்டில் இன்றும் பெண்ணாச்சி, பெண்ணாளுமையின் எச்சங்கள் மிச்ச...

எங்கே போயின

Image
தேடிப் தேடிப் பார்த்தேன் தெருவெங்கும்; கண்ணில் தட்டுப்படுமா ஒன்றாவதென்று: எங்கோ போயின அவை ? என்ன ஆயிற்று அவற்றுக்கு? ஒருவேளை கால வெள்ளம் கரைத்துச் சென்றுவிட்டதோ! ...

இதுலாம் பழசப்பா

Image
  மாதம் பங்குனி​ என்பதால் பல நினைவுகள் சுற்றுகின்றன.... மனதுக்குள்! என்னதான் வெயில் எல்லா ஊர்லயும் அடிச்சாலும் நம்ம ஊர்ல கூட ரெண்டு டிகிரி சேர்ந்து அடிக்கோங்க மாரி தான் எங்களுக்கு தோணும், வெள்ளாமைலாம் முடிஞ்சு வயல்காடுகளெல்லாம் கிடைக்கு விடுத நேரம்- அப்படி கிடைக்கு விடாத வயகாடுலாம் விளையாட்டு​க் காடா மாறிரும். பத்து பன்னிரண்டு படிக்க பிள்ளைகள் தவிர்த்து​ மத்த பிள்ளைகளுக்குலாம் இப்ப இருந்தே ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு வந்துரும் அதுவோ. பரீட்சை பத்தி கூடும் பிள்ளையள் அதிகம் நினைக்காதுவோ ஆனா அடுத்து​ வார கோடை லீவுக்கான திட்டம் போட ஆரம்பிச்சுரும். ஆச்சி வூட்டுக்கு போலாமா இல்ல அத்தை வூட்டுக்கு​ போலாமாங்க மாரியான திட்டம்லாம் போட்டு ரெடியாயிரும். வீடுகள்ல பங்குனி உத்திரக் கொடைக்கு வெட்டதுக்கு உண்டான கிடாய் லாம் கொழு கொழுனு வளர்ந்து ரெடியா நிக்கும். உத்தரம் முதப்புல வந்தா அவ்வளவு சந்தோஷம் இருக்காது பிள்ளையளுக்கு, மாசக் கடசில வந்துட்டுனா சந்தோஷப்படுங்க. லீவு வுட்டுட்டா போதும் ஆத்துலயும், காய்ஞ்ச வயக்காட்டுலயும் தான் அதுவோ கிடக்கும். காலைலயும், சாந்திரமும் ஆத்தங்கரையும், படித்துறையும் ரொ...