Posts

Showing posts from November, 2022

வகுப்பின் கடைசி நாள்

Image
 நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டன வகுப்பறையை விட்டு வந்து. இன்னும் படிப்பிற்கான தாகம் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. என்ன தான் இன்று Self learning ஆன்லைன் வகுப்புகள் இருந்தாலும் ஒரு ஆசிரியர் நடத்தும் வகுப்பறைக்கு ஈடு இல்லை. அதை இப்போது நான்றாகவே உண்ரந்து இருக்கிறேன். ஏதேதோ படிக்கப் போய் அதில் எதுவுமே வெற்றி அடையவில்லை. கடைசியாக சேர்ந்தது ஜெர்மன் மொழி வகுப்பறையில். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட அனுபவம். அடுத்த தலைமுறை வகுப்பிற்குள் நுழைந்ததைப் போல இருந்தது.  ஒரு நாளும் என் வாழ்நாளில் இப்படி மடிக்கணினியில் பயில்வேன் என சிறுவயதில் நினைத்திருக்கவே இல்லை. பொட்டக்காட்டில் பட்டிக்காட்டில் இருந்த நமக்கு அதெல்லாம் எட்டாக்கனி தானே! அதை விடுங்கள். வகுப்புக்கு வருவோம். மும்பை கோத்தே இன்ஸ்டிடுட் (Goethe Institut) இல் ஏ1 ஜெர்மன் மொழிப்பாடத்தில் ஆன்லைன் வழி வகுப்பில் இணைந்து இத்தோடு நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இவர்களது வகுப்புகள் பயிற்சி முறைகள் நன்றாகவே இருந்தன. ஆனால் என்ன நமது சொந்த முயற்சியும் பயிற்சியும் கட்டாயம் தேவை. அதுவும் மொழியைக் கற்றுக் கொள்ள பயிற்சியே பிரதானம் மற்றவையெல்லாம் ஊறு...