ஜூம் புரட்சி
ஞாயிற்றுக்கிழமை அன்றே இதை எழுத வேண்டுமென்று எண்ணினேன். வேறு வேலை வந்து விட்டதால் முடியவில்லை. ஜூம் செயலியின் வாயிலாக இலண்டனில் வசிக்கும் சிவசுப்பிரமணியம் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை எனது நண்பர் திரு சிறீராம் அநக்ஸ் மற்றும் சசி அவர்களின் Bibliotheca - இணைய தமிழோசை அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. ஏறத்தாழ ஒரு 25 பேர் கலந்து கொண்டிருந்தனர். திரு சிவசுப்பிரமணியம் அவர்கள் குரல் போட் ( Kural bot)^¹ எனப்படும் இணையப் பயன்பாட்டை ஏற்படுத்தியவர். இதன் மூலம் நீங்கள் வேண்டுகிற திருக்குறளைப் பக்கம் திருப்பி தேட வேண்டிய தேவை இல்லை. அந்த முகநூல் பக்கத்தில் உள்ள Messaging option ல் சென்று குறளுக்குரிய வரிசை எண்ணை மட்டும் அனுப்பினால் போதும். அந்த எண்ணிற்குரிய குறள் உங்களுக்கு செய்தியாக உடனடியாக வரும். விரிவான விளக்கத்திற்காக கீழே படத்தை இணைத்துள்ளேன். மேலும் அன்றில் டாட் இன் ( andril.in )^² என்ற இணையதளத்தின் மூலமாக சங்கப்பாடல்களை பல தலைப்புகளின் கீழ் தமிழ் படிக்காதவர்களும் எளிதாக பார்க்கும் வகையில் கொடுத்திருக்கிறார். அது பெரிய புத்தகங்களைத் தேடி திருப்புவதற...