Posts

Showing posts from July, 2020

கருப்பர் கூட்டம் சரியா தவறா?

இன்று மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. கருப்பர் கூட்டம் குழுவினர் வெளியிட்ட கந்தர் சஷ்டி கவசம் தொடர்பிலான காணொளியின் வாயிலாக பிரச்சனை வெளிப்பட்டிருக்கிறது. எத்தனையோ நபர்கள் இந்துமத இதிகாச புராணங்களை பற்றி விமர்சித்து பேசியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள், எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். பெரிய அளவிலான எதிர்ப்பு என்பதோ, வெறுப்பு என்பது மக்களிடம் எழுந்தது கிடையாது. சில நேரங்களில் திட்டமிட்டு வெளிப்படுவதும் உண்டு எனினும் கவனம் பெறுவது குறைவு. கந்தர் சஷ்டி கவசம் தொடர்பிலான இந்த காணொளி பிரச்சனைக்கு வித்திட்டதற்கு மாரிதாஸ் மட்டுமே காரணம் அல்ல. ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இனக்குழுவினரின் செண்டிமெண்டல் தொடர்பான பொருட்களில் கைவைக்கும் பொழுது சில நேரங்களில் கடி படுவதும் உண்டு. அதுதான் இப்பொழுதும் நிகழ்ந்திருக்கிறது. இராமரை அன்றாடம் விமர்சனம் செய்கிறோம். அதற்கு அவ்வளவு எதிர்ப்பு கிளம்புகிறது? என்றால் இல்லை என்பதுதான் தெளிவான பதில். அப்படி இருப்பின் முருகர் விஷயத்தில் எப்படி இவ்வளவு எதிர்ப்பு கிளம்பிற்று? இராமர் தமிழருடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டவர் அல்ல. முருகரோ அதற்கு நேர...