Posts

Showing posts from January, 2018

இகழ்தலும் இலமே

Image
பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192) - கணியன் பூங்குன்றனார் இங்கே ஒரு பிரச்சினை பல பிரச்சினைகளுக்கான விதையாகிவிடுகிறது. #நாச்சியாரை நடுவீதியில் நிறுத்தி நாறடித்துவிட்டார்கள். #போகட்டும். #அதையே சாக்காக வைத்து நம்முடைய வெறுப்பையெல்லாம் உமிழ்வது என்பது அபத்தமானது, ஆபத்தானது. தமிழ்பேசும் பார்ப்பனர்களை(பிராமணர்களை)  ஒட்டுமொத்தமாக குற்றஞ்சுமத்துவது என்பதும் தவறான ஒன்றாகவே நான் பார்க்கிறேன். சமுக நீதிக் கருத்துக்களை, திராவிடச் சிந்தனைகளை ஒருங்கே கொண்டவர்களும் பார்ப்பனர் வகுப்பிலிருந்து வந்திருக்கிறார்கள். சமீபத்திய உதாரணமாக டி.எம்.கிருஷ்ணா அவர்களைக் கூறலாம். எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் மூலம் பல தமிழ்க்கீர்த்தனைகளை எழுதச் செய்து அவற்றை மேடையேற்றிவருகிறார். கருநாடக இசையை ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மட்டும் பயின்று பயிற்றுவித்துக் கொண்டிருக்கும் நிலையை மாற்ற பெருமுயற்சி எடுத்து வருகிறார். அண்மையில் பேருந்தில் பரதநாட்டியத்தை அரங்கேற்றம் செய்ய வைத்து வெகுமக்கள் கலையாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இது ஒரு சான்று தான். இந்து எ...