கொடைவிழாவும் வில்லிசையும்
கொடைவிழா - என்றாலே தென் மாவட்டங்களில் வெகு விமரிசையாக கோவில்களில் கொண்டாடப்படுவது வழக்கம்.
பொதுவாக சைவ ( பலி பூசை இல்லாத ) கோவில்களில் கொடியேற்றி நடைபெறுவது திருவிழா என்றும் அசைவ ( பலி பூசை நடைபெறும் ) கோவில்களில் நடைபெறுவது கொடை விழா என்றும் அழைக்கப்படுவது நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் வழக்கம்.
அப்படியான கொடை விழாக்களில் தவறாமல் இடம்பெறுவது வில்லிசை எனப்படும் வில்லுப்பாட்டு ( வில்லடிச்சான் பாட்டு எனவும் அழைக்கப்படும்). அதே நேரம் சில சுடலை மாடன் கோவில்களில் கணியான் கூத்து இடம்பெறும்.
வரலாறு : போர் முடித்து வந்த வீரர்கள் தங்களின் கையில் இருந்த வில்லை அடித்தபோது அது ஒரு விதமான ஓசை கிளம்பியதாகாவும் அதுவே வில்லிசையாக பின்னலில் உருவானதாகவும் இலக்கியங்கள் சொல்லுகின்றன.
வில்லுப்பாட்டில் வில்லு , குடம், கட்டை , ஜால்ரா, உடுக்கு, வீசுகோல் முதலியவை பயன்படுத்தப்படும்.
வில்லிசை யானது நாட்டு வளம் சொல்வதில் தொடங்கி குரு வணக்கம், இறைவணக்கம், கலைமகள் வணக்கம் என்று கதை பாடல் ஆரம்பிக்கும்...நாட்டு வளம் கூறும்போது நான் கேட்ட வில்லில் நினைத்தால் தமிழ் மணக்கும் நெல்லை மாவட்டத்திலே என்று ஒரு சில வில்லுக்கார்கள் கூறுவார்.
வில்லிசை பொதுவா ஆண் ,பெண் தெய்வங்கள் எல்லாவற்றுக்கும் உண்டு.தெய்வங்களின் முக்கியத்துவம் கருதி அதாவது கொடை நடைபெறும் கோவிலில் எது தலைமைத் தெய்வமோ அதற்க்கு வில்லிசை பாடப்படுவது வழக்கம். சில கோவில்களில் குறிப்பாக பாடக லிங்க சுவாமி கோவிலில் முத்துப்பட்டன் அல்லது சங்கிலி பூதத்தாருக்கு வில்லிசை பாடப்படும்.
சாஸ்தா , சுடலை மாடன்,தளவாய் மாடன், முத்துப்பட்டன், சங்கிலி பூதத்தார்,இசக்கி அம்மை,பேச்சி அம்மை, முப்பிடாதி அம்மை, வடகாசி அம்மை,வடக்குத்தி அம்மை, மாரியம்மை, காளியம்மை, வண்டி மறிச்ச அம்மை , பிரமராச்சி அம்மை, அங்காள ஈஸ்வரி என இப்படி ஒவ்வொரு சாமிகளுக்கும் உள்ள வரலாறைப் படிப்பார் வில்லில் .....நெல்லை வட்டாரத்தில் கருப்பசாமி வழிபாடு குறைவு ஆதலால் அந்த வரலாறு பற்றி எமக்கு அதிகம் தெரியாது.
வில்லுப்பாடிக்கொண்டிருக்கும் போது இடையிடையே அன்பர்கள் வில்லுப்படிப்பவருக்கு நன்கொடை , பாரட்டுபணம் கொடுப்பர். அப்படி கொடுப்பவர்களை பேர் சொல்லி 21 ரூபாய் கொடுத்தால் 21 லட்சம் அன்பு பாராட்டி உள்ளனர் - என்று உயர்த்தி, அன்னாரது குடும்பம் வாழையடி வாழையாக வழ வேணும் வளர வேணும் இந்த சாமியின் அருளால் என்று வாழ்த்து படிப்பார். அண்மையில் ஒரு கொடை விழாவில் வில்லிசை காணச்சென்ற போது முகமதியர் ஒருவர் 20 ரூபாய் அன்பு பாராட்டி இருந்தார்....ஆக மதத்தை கடந்தும் வில்லிசையனது சென்றடைந்துள்ளது என்பதே உண்மை.
இறுதிப் பகுதியாக வாழ்த்துப் பகுதி அமையும். கதை கேட்போர், கதை மாந்தர், கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாக மங்களமாக முடிவு பெறும் நிலை வாழிபாடுதல் என்பது.
வில்லிசை பொதுவாக நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகமாகவும், ராம்நாடு , விருதுநகர் வட்டாரங்களில் குறைந்த அளவிலும் நிகழ்த்தப்படுகிறது.
ஆழ்வார்குறிச்சி அருணாசலம் பிள்ளை, புலவர் சுப்பு ஆறுமுகம், சங்கரன்கோவில் சண்முகத் தாய், தோவாளை சுந்தரம் பிள்ளை, திருநெல்வேலி புலிகுட்டிப் புலவர்,விளாத்திகுளம் ராஜலட்சுமி என பிரப்லமானோர் பலர்.திரைப்பட நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இளவயதில் சிறந்த வில்லிசை கலைஞராக இருந்தவர்.அவர் தான் நெல்லை வட்டாரத்தை தாண்டி வடக்கையும் கொண்டு சென்றவர் வில்லிசையை...
இன்று இந்த எழுச்சி மிக்க கலை பரிதாபகரமான நிலையில் உள்ளது என்பதே உண்மை. பிரான்சேரி கரையடி மாடசாமி கோவில், சொரிமுத்தன் கோவில், மருகால்தலை பூலுடையார் சாஸ்தான்கோவில் உள்ளிட்ட பிரபலமான கோவில்களில் பாடும் வில்லிசை கலைஞர்கள் ஓரளவு செழிப்பாக உள்ளனர்.மற்ற படி இதர கோவில்களில் பாடும் கலைஞர்கள் வாழ்வாதாரம் மோசமானதாகவே உள்ளது.
இரவு முழுக்க கண்முழித்து தான் வில்லுப்படிப்பர். அதனால் உடலுழைப்பு தேவைப்படும்......இன்று இக்கலையில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை விரல் விட்டு என்னும் அளவில் தன உள்ளது. ஒரு சில இடங்களில் எவ்வளவ் கொடுத்தாலும் கொடை நேரங்களில் வில்லுப்படிக்க ஆள்கள் கிடைப்பது அறிய்தாகவே உள்ளது.
மக்களிடமும் இக்கலை பற்றிய போதிய விழிப்புணர்வை அரசாங்கமும் அமைப்புகளும் ஏற்ப்படுத்தாததால் இன்றைய இளைஞர்களை இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க கலை ஈர்க்க வில்லை என்பதே உண்மை.
சமீபத்தில் எங்கள் தெரு முக்கில் உள்ள பாடாப்பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற வில்லிசை காணச்சென்ற பொது மிகச்சிலரே இருந்தனர் வில்லு பார்க்க, அதுவும் வயசான ஆச்சி மார்கள் தாத்தாமார்கள் ....அவர்களும் போய் விட்டால் ...............
படம் : சங்கரன்கோவில் பாடகலிங்க சாமி கோவில்

Comments
Post a Comment