பொங்கல் கொண்டாட்டங்கள்

தமிழர் திருநாள், தைத்திருநாள், தைப் பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு என்னும் பெயர்களில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை குறித்து  எங்கள்  பகுதிகளில் நிலவும் வழக்காறுகள் குறித்த பதிவு....

பொதுவாக  கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி பிறந்தவுடனே  பொங்கலுக்கான முன்னோட்ட ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிடும். வீட்டுக்கு வௌ்ளையடிப்பது, அத்தோடு ஒரு வருடமாக விளக்கவே செய்திராத பாத்திரங்களை (ஆலங்காலில்  இருக்கும் பித்தாளை மற்றும் செம்பு பாத்திரங்களை ) கழுவிப் பெறக்கி எடுத்து  வைப்பார்கள்.  பிறகு அடுத்த பொங்கலுக்கு தான் அவை வௌியே வரும். மார்கழித் திருவாதிரைக்கு  அப்புறம் கொஞ்கம் ஏற்பாடுகள் தீவிரமாகிவிடும்...திருவாதிரை சாமி பார்த்துவிட்டு வரும் போது கூடவே கரும்பும் வாங்கிவரும் பழக்கம் எங்க ஊரில் இன்றும் இருக்கிறது. வௌ்ளையடித்த மீத சுண்ணாம்பை பத்திரமாக எடுத்து வைத்து  பொங்கல் அடுப்புகளை வௌ்ளையடிக்க வைத்துக் கொள்வர்.

        சிலரின் வீடுகளில் ( குறிப்பாக திருமணப் பருவத்தில் இருக்கும் பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டின்) கோலங்களில் சாணி வைத்து பூசணிப் பூ வைப்பர்.

   பொங்கலுக்கு சில தினங்கள் முன்பாக கரும்பு கட்டுகள் முப்பிடாதி அம்மன் கோவில் திடலிலும், அங்கூர் விநாகர் கோவில் முன்பும் வந்திறங்கும்.தெருக்களில் கோலப்பொடி , கலர் பொடி, பனங்கிழங்கு , காய்கறி,  கிழங்கு யாவாரிகள்  வந்த வண்ணம் இருப்பர். இது போக மெயின்  பஜாரின் இரு மருங்குகளிலும் மஞ்சள் குலைகள் இதர பொருட்களின் விற்பனை களைகட்டும். போகிப் பண்டிகையை  எம்மக்கள்  அப்படி ஒன்றும் கொண்டாடுவதில்லை.அன்று பொங்கலுக்கான  முன்னேற்பாடுகளே நடக்கும் அதாவது வீட்டை துப்புரவு பண்ணுதல், துணிமணிகள், போர்வை, பாங்களை அலசுதல்  ஆகியவற்றையே செய்வார்கள். அன்றிரவு  பெரும்பாலான வீட்டுப் பெண்களுக்கு தூக்கம் என்பதே இருக்காது.
   சில பேர் இரவு 12 அல்லது 1 மணிக்கே  கோலம் போட்டு படுக்கச் சென்றுவிடுவார்கள். சிலர் அன்று பின்னிரவு 2- 3 மணிக்குத் தான் கோலம் போடத் தொடங்குவர். தொடங்கி அவர்களுக்கு கோலம்  போட்டு முடிக்கவே நேரம் சரியாக இருக்கும்.பிறகு  குளித்து விட்டு பொங்கல் வைக்க ஆரம்பித்து விடுவர்.இதற்கிடையில் குழு குழுவாக பெண்கள் அன்று இரவு கோலங்களை பார்வையிட்டு கொண்டே ஏதோ நடுவர் போல மதிப்பிட்டுக்கொண்டு  வருவர்.

     பெரும்பாலானோர்  சூரிய உதயத்துக்கு முன்பே பானைகளை பற்ற வைத்துவிடுவர். பெரும்பாலும் வீடுகளில் இரண்டு பானை பொங்கல் தான் உண்டு - ஒன்றில் சர்க்கரைப் பொங்கல், மற்றொன்றில் வெண்பொங்கல்.
 பெரும்பாலும் பித்தளைப் பானைகளில் பொங்கலிடுவதே எங்கள் ஊர் மரபு.
பொங்கல் வைத்து முடித்தவுடன்      எல்லா வகையான கிழங்குகள், காய்கறிகள் வைத்து சூரிய  பகவானை வழிபடுவர். பின்பு சொந்தக்காரர்களின் வீடுகளுக்கு  செல்வர். சாயந்தரம் வாக்கில் கோவிலுக்கு சென்று சாமிகும்பிட்டுட்டு வருவார்கள்.

    மறுநாள்  மாட்டுப்பொங்கல் - பொதுவாக எங்கள் ஊருக்குள்ளே சிற்சிலர் மட்டுமே மாடு வைத்திருந்தமையால் அதைப் பற்றி எனக்கு அவ்வளவு  பரிச்சயம் இல்லை. ஆனால் அன்று  பெரும்பாலானோர்  ஊருக்கு வடக்கே இருக்கும் "தலைவெட்டி நாகயசாமி காமயநாயக்கர் சமாது"வில்  சென்று பொங்கலிடுவர்..... இன்று அவ்வழக்கம்  சிறிது மங்கிவிட்டது.
          மற்றையவர்கள்  ஊருக்கு  மேற்கே இருக்கும்  ஆத்தியடி  விநாகர் கோவிலுக்கும், அதனருகில் உள்ள குளக்கரைக்கும்  சென்று பொங்கல் கரும்பு, பனங்கிழங்கு  இதையெல்லாம் சாப்பிட்டு  ஊர்க்கதை பேசிவிட்டு வருவர்.......சிலர்  கோவிந்த்ப்ரேி   அருகில் ஆண்டாண்டு காலமாக நடக்கும்  "கள்ளன் பிடித்தல் "  நிகழ்வை பார்க்கச் செல்வர். அது  வேறொன்றுமில்லை  பெரிய கோவிலிலிருந்து  சந்திசேகரர் புறப்பட்டு வந்து மண்டபத்தில் அபிடேக அலங்காரங்கள் நடக்கும்.  நடந்த பின்பு சாமி புறப்படுவார் ..... அப்போது பட்டரில் இருவர் கள்ளனாக  நடித்து  சாமியிடமிருந்து  "மணி - செம்பு " களவாண்டு போவர்  .....சாமி அவர்களை விரட்டிச்சென்று பிடிப்பார்......

இன்றும்  அவையெல்லாம்  நடந்தாலும்  ஏதோ  கடனே என்று நடப்பதாகத் தான் இருக்கிறது....

கொண்டாட்டங்கள்  என்பவை மக்கள்  கவலைகளை மறந்து சில நாட்களாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான்......ஆனால் இன்று மக்கள் டி.வி.யைப் பார்த்து உண்டு கொழுத்து படுத்து



உறங்குகிறார்கள்...

Comments

Popular posts from this blog

ஊடலும் ஊடல் நிமித்தமும்

தண்பொருநை தொடர் -1

முகைத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்