தசரா

தசரா   என்றவுடன் நமக்கு முதலில்  நி னைவுக்கு வருவது  மைசூர் அதுக்குப் பொறவு நம்ம குலசேகரப்பட்டினம்

அதேபோல விமரிசையாக நெல்லை டவுண் மற்றும் பாளை சுற்றுவட்டாரங்களிலும் கொண்டாடப்படுவது பலர் அறிந்திராததாகும்.

நெல்லை டவுணில் 15 சப்பரங்கள் அணிவகுப்பும் , பாளையில் 12 சப்பரங்களின் அணிவகுப்பும் நடைபெறுவது வழக்கம். இத்தனை சப்பரங்கள் ஒரே இடத்தில் அணிவகுப்பது வேறெங்குமில்லாதது ஆகும். 

           தசரா விழாவைப் பற்றி எங்க எதித்த வீட்டு சங்கர் மாமா கூறியதை தங்களிடம் கூறுகிறேன்

அக்காலத்தில்  இப்போது உள்ளது போலில்லாமல் வெகு விமரிசையாக தசரா கொண்டாடப்படுமாம்.8ம் திருவிழாவின் போது பூம்பல்லாக்குகளின் அணிவகுப்பும் நடைபெறுமாம்.
தசரா அன்று இடம்பெறும் சப்பர அணிவகுப்பே ஒரு போட்டி போல தான். ஒவ்வொரு கோயில் சப்பரமும் அதுக்கு போட்டியாக இது, இதுக்கு போட்டியாக அது என்று சொல்லத்தக்க  வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒலி ஔி அமைப்பு ஏற்பாடு செய்யும் சீரியல் செட்டுக்காரர்கள்  தங்களுடைய தொழில் போட்டியையும்  திறமையையும் வௌிப்படுத்தும் களமெனவே எண்ணி செட்டு போடுவார்களாம்.இன்றும் அது  தொடர்கிறது. சப்பரங்கள் அந்தந்த சமுதாயத்தின் செல்வாக்கை வௌிப்படுத்துபவையாக இருக்கிறது.  அது போல ஒவ்வொரு சப்பரங்களுக்கு பின்னும் அந்தந்த சமுதாயத்தவர்கள் தங்களுடைய வீரப்பிராதாபங்களைக் காட்டி வருவராம்.அதாம்யா சிலம்பு, மான் கொம்பு  போன்ற வீரவிளையாட்டுகளில் ஈடுபட்டு  போட்டி போடுவராம்,  தெருவில் இருப்பவர்களையும் அழைத்து இது போன்றவற்றில் ஈடுபடுத்துவராம்.பின்னாடி இதுவே பிரச்சனையாயிட்டு என்பதால் நிப்பாட்டி விட்டார்களாம்.

          இப்போ அமைதியாக இல்ல இல்ல மேள தாளத்தோடு அதிர்வேட்டு முழங்க திருவிழா மட்டும் சீராக நடைபெறுகிறது. அந்த  பழைய உற்சாகம் மட்டும் இல்லை.
          சப்பரம் மற்றும் சீரியல் செட்டு அலங்காரம், அம்மன் உருவ அலங்காரம்லா  நம்மூர மாரி எங்கயும் வராதுலே..
          எனினும் இந்த வருடம் தசரா பார்க்க முடியாத மெட்ராஸ், பெங்களூரு மற்றும் இதர ஊர்களில் இருக்கும் நம்மூர்க்காரர்களுக்காக தசரா படங்கள் இதோ

















Comments

Popular posts from this blog

ஊடலும் ஊடல் நிமித்தமும்

தண்பொருநை தொடர் -1

முகைத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்