தலையணை
தலையணை என்றவுடன் நம் நினைவுக்கு முதலில் வருவது பாவநாசம் தான். எங்க ஊர்ப்பக்கமும் அப்படி ஒரு இடம் உள்ளது. ஆனால் அதைப் போல நீர் வளம் மிகுந்த இடம் அல்ல, மழை பெய்தால் நீர் தளும்பி வரக்கூடியதாகும் .
வாருங்கள் அங்கே ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாம்...
கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது வாசுதேவநல்லூர் என்னும் சிற்றூர். அங்கே இருந்து மேற்கே 8 கி.மீ. பயணித்தால் ( பஸ் எல்லாம் கிடையாது வண்டியில இல்ல ஆட்டோல தான் போவனும்) வரும் தலையணை. போகும் வழியில் தரணி சர்க்கரை ஆலை, தரணி பன்னாட்டுப் பள்ளி, தொழிற்பயிற்சி நிலையம், பொறியியற் கல்லூரி எல்லாம் உள்ளன.
தலையணையை அடைந்தவுடன் காட்டிலாகாவின் சோதனைச் சாவடி உள்ளது.அவ்வழியே முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே அநுமதி என்பதால் அதனையொட்டி அமைந்துள்ள இறக்கத்தின் வழி கீழிறங்கியது.. வண்டி.
அரை கி.மீ தூரம் மண்சாலையில் சென்றால் வருகிறது ஆற்றங்கரை.
தௌ்ளத் தௌிந்து ஓடிகிறது ஆறு.. கூழாங்கற்களும் மணலும் நிரம்பி உள்ளன..
தண்ணீரோ பளிங்கு போல உள்ளது. ஆற்றில் வழியே மேலேறிச் சென்றால் நன்றாக முங்கிக் குளிக்கக்கூடிய இடங்கள் உள்ளனவாம்..
ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர் கருத்தப்பாண்டி அந்த இடத்தைப் பற்றி நிறைய சொன்னார்.
கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர் ஆட்சியில் கேரள மாநில அரசு மலைக்கு மேலே இருக்கக்கூடிய "செண்பகவல்லி அணையை" உடைத்து விட்டதனால் தற்போது ஆற்றில் வரத்து குறைந்து விட்டதாம்.இல்லையெனில் ஆற்றில் வருடம் முழுவதும் நீர் ஓடுமாம் .தற்போது சீசன் காலங்களிலும், மழைகாலங்களிலும் மட்டுமே தண்ணீர் தலைகாட்டுகிறது.அந்த அணை மட்டும் சீரமைக்கப்பட்டால் கிழக்கே சாத்தூர் வரை செழிப்பான பகுதியாக மாறும். ஒரு காலங்களில் அப்படி எல்லாம் இருந்ததாம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
"ஆற்றின் வழியே மேலே சென்றால் 'ஆனைக்கிடங்கு' என்ற இடம் வருமாம்.அதுவரைக்கும் செல்லலாம் அதற்கு மேலே சென்றால் வனத்துறைக்குத் தெரிந்தால் பிரச்சனையாகிவிடும்" என்றார் அவர். மேலும் சமீபத்தில் அங்கே சென்று சில வாலிபர்கள் ஆழம் தெரியாமல் மூழ்கி இறந்துவிட்டனர்.
கேரள வனத்துறை:
மலையின் அந்தப்புறம் பெரியார் புலிகள் காப்பகம் இருப்பதால் அடிக்கடி கேரள வனத்துறையினர் வந்து விட்டு போவார்களாம்.செல்லும் வழியில் கேரள வனத்துறையின் அலுவலகம் ஒன்றும் கண்ணில் தட்டுப்பட்டது.
ஆட்டோ டிரைவர் சொன்ன முக்கியமான செய்தி:
சொந்தமாக இருசக்கரவாகனங்கள் மற்றும் கார்களில் வருவோர் எனில் இது முக்கியமானது. இருசக்கர வாகனங்களில் வருவோர் பெட்ரோல் டியூபை கழற்றி பெட்ரோலை கேனில் பிடித்து கையோடு கொண்டு செல்வது இல்லையெனில் தெரியாத இடத்தில் ஔித்து வைத்து விட்டுச் செல்வது நலம். ஏனெனில் பெட்ரோல் கள்ளர்கள் இங்கு உள்ளனராம்.அப்படியே விட்டு விட்டுச் சென்றால் பிறகு வரும் போது 8 கி.மீ வண்டியை உருட்டிக் கொண்டு தான் செல்ல வேண்டும். கார்களில் வருவோர் கவனமாக வண்டியைப் பூட்டி விட்டு, விலையுயர்ந்த பொருட்களைக் கையோடு எடுத்துச் செல்வது நல்லது என்றார்.

Comments
Post a Comment