திருச்சீரலைவாய் தொடர் -1
சில விசயங்கள் வெறும் செய்தியாக விட்டு விடாமல் அதிலுள்ளே இருக்கும் உண்மைப் பொருளைக் கொண்டு வர சில ஆராய்ச்சிகள் தேவை.
திருச்செந்தூர் - தமிழ்நாட்டில் பிரபலமான ஊர். இங்கு இருக்கும் முருகப்பெருமான் செந்திலாண்டவர் அல்லது சுப்பிரமணியர் என்னும் திருப்பெயர் தாங்கி வீற்றிருக்கிறார். இவருக்கும் தமிழ் வரலாற்றுக்கும் என்ன சம்பந்தம்? இது அறிவுசார் நோக்கில் எழுதப்பட்டிருப்பது - வெற்று நம்பிக்கைகளை புறம் தள்ளி சற்று அதனுள்ளே புதைந்து கிடக்கும் சில உள்ளார்ந்த விடயங்களினூடாக புரிவோம்.
'சேயோன்' அல்லது முருகன் என்று அழைக்கப்படும் கடவுள் சங்க இலக்கியங்களில் குறிஞ்சி நிலத்துக்குரிய 'கடவுள்' ஆவார். அதுமுதல் கொண்டு 'குன்றுதோறாடல்' என்னும் கூற்றைத் தொடர்புறுத்திப் பார்க்கலாம். அங்கே ஒரு இணைப்பு இருக்க வாய்ப்பு அதிகமிருக்கிறது. ஆனால் திருச்செந்தூர் இருப்பதோ கடற்கரையில்! பின்னெப்படி முருகப்பெருமான் கோவில்??
கௌமாரம் என்னும் சமய அமைப்பை அறியாத நிலையிலேயே முருகனைத் தமிழர் தொன்று தொட்டு குறிஞ்சி நிலக் கடவுளாக வணங்கி வந்துள்ளனர். அவன் போரிற் சிறந்த திராவிடத் தெய்வம். அவன் சேயோன் எனப்பட்டான். 'செருமிகு சேய்', 'திருத்தகு சேஎய்', 'வெல்போர்ச்சேய்', 'வெல்போர்க்கொற்றவைச் சிறவு', 'கடம்பமர் நெடுவேள்', 'முருகுடன்று கறுத்த', 'முருகு உறழப்பகை', 'முருகர் சீற்றத்த துறுகெழு குரிசில்', 'முறுகி னன்ன சீற்றத்து' என சங்க இலக்கியங்கள் முருகனது போர் வலிமையையும் அறச்சீற்றத்தையும் வெற்றியையும் வெருட்சியையும் வீரத்தையும் குறித்தே நின்றன. முருகனுக்கு கோவில் இருந்ததை சிலப்பதிகாரமும், புறநானூறும், அகநானூறும் சொல்லுகின்றன.
சங்க இலக்கியத்தில் நாட்டார் தெய்வமாக ஒரு குறிப்பிட்ட மக்களால் வணங்கப்பட்ட தெய்வமாக இருந்த முருகனுக்கு பிற்காலத்தில் ஆரிய சாயம் பூசப்பட்டு பல்வேறு கதைகள் அதை நிரூபிக்க கூறப்பட்டன.
சிலம்பிலேயே இதனுடைய தொடக்கம் இருந்திருந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தில் ஆறுமுக வொருவன், ஆலமர் செல்வன் புதல்வன், கயிலைநன் மலையிறை மகன், மலைமகள் மகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான்.
வெறியாட்டு முருகனை முன்னிட்டு ஆடப்படும் ஒரு வழிபாடு முறையாக இருந்திருக்கிறது. அதை ஆடுபவர்கள் குறவர் எனப்படும் மலையினத்தவரே. இப்படியாக தமிழ் நிலத்தில் வழிபடப்பட்ட முருகன் பின்னாளில் ஆரிய வருகையையொட்டி ஆரிய கடவுளான 'ஸ்கந்தன்' உடன் ஒண்டிக்கப்பட்டு விட்டான் என்பதே கசக்கின்ற உண்மை ஆகும்.

முருகன் - ஸ்கந்தன் ஒன்றிப்பு நடந்த விதம்:
- இருவருமே இளைய கடவுளாகவும், தீயவற்றை அழிப்பவர்களாகவும் இருந்தது.
- சேயோன் எனப்படும் சங்க இலக்கிய முருகன் பாலை நிலத் தெய்வமான 'கொற்றவை' யின் மகனாகவும் உருவகம் செய்யப்படுகிறான்.
- ஆரிய கடவுளுக்கு தந்தை இருந்தார், தமிழ் கடவுளுக்கு தாய் இருந்தார்.
- திராவிட கடவுளான கொற்றவை - ஆரிய கடவுளான காலி, துர்க்கை, பார்வதியாக சங்க காலத்தின் போதே உருமாற்றம் பெற தொடங்கியதும் எளிதாய் போனது ஒன்றிப்புக்கு.
- தாரகன் என்னும் வடவர் அசுரன் தென்னவர் அசுரனான சுரபத்மனது தம்பியாக உருபெறச் செய்யப்பட்டான்.
- ஸ்கந்தனின் மனைவியான தேவசேனா தெய்வானை ஆகா மாற்றப்பட்டாள். அங்கே தான் தமிழ்க் குறத்தி வள்ளி முருகனின் களவு மனைவியானாள். முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி கதை சொல்லப்படுகிறது.
- இது அத்தனையும் செய்த வடவர் - ஸ்கந்தனின் தீ ஆயுதத்திற்கு பதில் திராவிட ஆயுதமான 'வேலையும்' முருகனின் கைகளில் இருந்து மாற்றாமல் விட்டு விட்டதென்னவோ ஆச்சரியம் தான்.
இது நடந்த காலம் எப்போதென்றால் 4 ஆம் நூற்றாண்டு முதல் 7 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் தான். பிறகு எழுத சைவம் முருகனைச் சுவீகரித்துக் கொண்டது. அதுவே நிறுவன சமய வழிபாட்டுக்கு முருகனை இட்டு சென்றது எனலாம்.
இதற்கான சான்றுகள் யாவும் 3-4 ஆம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தையும் - பின்பு 6-7 ஆம் நூற்றாண்டில் எழுந்த திருமுருகாற்றுப்படையையும் உற்று வாசித்தால் புலனாகும்.
இது முருகன் - ஸ்கந்தனாக மாற்றப்பட்டது. சரி, திருச்செந்தூர் வரலாறு என்ன ஆச்சு என்கிறீர்களா? இதோ,
'திருமணி விளக்கின் ஆலைவாய்' என அகநானூறுவும், 'வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்' என புறநானூறும், 'சீர்கெழு செந்தில்' என சிலப்பதிகாரமும், 'உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீரலைவாய்' என திருமுருகாற்றுப்படையும் ஏத்துகின்றன.
திருச்செந்தூர் ஆதியில் கடலோரத்தில் இருந்த மணல்குன்றாகவே இருந்துள்ளது. இதற்க்கான ஆதாரங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன. வள்ளி ஒளிந்த குகை அருகில் அன்று இருந்த மலையின் எச்சத்தைக் காணலாம். பண்டு இலக்கியங்களில் இது சந்தன மலை என்றும் அறியப்படுகிறது.
![]() |
| கடலையொட்டிய மண் குன்றுகள் அக்காலத்தில் ( 1910 ). |
![]() |
| வள்ளி ஒளிந்த குகை - கடலோரத்தில் பாறையில் உள்ளது. |
இங்கு வாழ்ந்த மக்களின் தலைவனாக இருந்த (தமிழ்நாட்டில் நாயக வழிபாடு அதிகம் என்பது இன்றும் உண்மையாக உள்ளது கருத்தில் கொள்ளத்தக்கது ) அல்லது குறிஞ்சி கடவுளான முருகனே ஆதியில் இருந்திருக்கக்கூடும்.
முதலாமாது உண்மை எனில் அந்த பகுதியின் குடித்தலைவன் ஆகா இருந்து அம்மக்களை சூரன் என்னும் பெயர் கொடுக்கப்பட்ட பக்கத்து குடித்தலைவனிடம் இருந்து போரிட்டு காத்திருக்கலாம். அத்தன்மை கருதி அவனுக்கு தெய்வ உரு ஏற்றியிருக்கலாம். போரிடும் அரசனின் ஆயுதமாக அக்காலத்தில் வேல் இருந்தது இயல்பே. அது நிமித்தம் முருகனின் கையில் இருக்கும் வேலை தொடர்பு படுத்தலாம்.
முருகன் அழித்ததாக கூறப்படும் சூரனாக காட்டப்படுபவன் அநேகமாக இலங்கை நாட்டைச் சேர்ந்த மன்னனாக இருக்கலாம். சூரனின் பெயரிலும் அவன் ஆண்ட நகரத்தின் பெயரும் சிங்கள பெயராக இருப்பதும் இங்கு கூர்நோக்கத்தக்கது. மஹிந்தபுரம் / வீரமகேந்திரபுரி என்னும் கடல் நடுவில் அமைந்த நாட்டை ஆண்டவனாக சிங்கமுகாசுரனும் சூரபத்மனும் சொல்லப்படுவது, அந்நாளைய சிங்கள குடித்தலைவனின் பெயர் முதலாக என்று எடுத்துக்கொள்ளலாம்.

| சூரசம்ஹார விழாவில் எழுந்தருளியிருக்கும் ஜெயந்திநாதர். |
திருச்சீர் அலையடிக்கும்.........

Comments
Post a Comment