பெண்கள் நாள்'20

12/14 வயதில் திருமணம்,
16/18 வயதில் பிள்ளை,
அதுவும் டஜன் கணக்கில்,
வீட்டுக்காரர் பெயர் சொல்லக்கூடாது,
யாரையும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது,
வெளியே செல்லக்கூடாது,
சொத்துரிமை கிடையாது,
கணவன் இறந்தால் உடன்கட்டை(வடநாடு),
கணவன் இறந்தால் ஒரு வருடம் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது,
வெள்ளைச்சீலை தான் இறக்கும் வரை,
15/16 பெண்கள் பலர் பொட்டுக்கட்டி 'தேவடியார்கள்' ஆக்கப்பட்டது,
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் மார்பை மறைக்கக்கூடாது-மேல்சீலை அணியக்கூடாது,
அடுப்பாங்கரைக்கும், அங்கணத்துக்குமிடையே ஒரு இருண்ட வாழ்க்கை,
வீட்டை தூக்க, துடைக்க, கழுவ, சமைக்க என இதுவும் ஒரு பொழப்பாக வாழ்க்கை! 
மேலும் கேட்டால் நாங்கள் பெண்களைத் தெய்வமாக வழிபடும் கலாச்சாரம் கொண்டவர்கள்! 
இந்த கலாச்சாரம் மயித்த பெருமை கொள்ள ஒரு கூட்டம்! 
தமிழரின் பண்பாட்டில் பெண்கள் இழிநிலைக்கு உட்படுத்தப்படவில்லை. கல்வி அறிவு பெற்றிருந்தனர். வீரப்பெண்மணிகளாக இருந்தனர். புலியை முறத்தால் அடித்து விரட்டியதாக சங்ககால மகளிரைப் பற்றி புறநானூறு பேசுகிறது. ஆக, இடையிலே வந்த பார்ப்பன ஆரிய வைதீக மதம் இந்த அநீதிகளை பெண்களுக்கு இழைக்கத் தொடங்கியது. 

இந்த இழிநிலை மறுபடி எப்போது மாறியது? மக்களே ஒரு நிமிடம் யோசிக்க வேண்டும். ராஜாராம் மோகன் ராய் தொடங்கிய சமூக சீர்திருத்தப் பணிகள் பின்னர் பல பெரியவர்களால் முன்னெடுக்கப்பட்டு திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த போது பெண்கள் விடுதலை பெறத்துவங்கினர். தந்தை பெரியார் கொண்டுவந்தார் பெண்ணியம் என்ற முழக்கத்தை இந்தியாவில்! முதலில் நீதிக்கட்சியும்,
பெண்களுக்காக தன் இறுதி மூச்சுவரை போராடிய பெரியார் கொண்டுவந்த சீர்திருத்தங்களை திராவிட இயக்கங்களும் பெண்களை வலுப்படுத்தின. இன்று தமிழகத்தில் நள்ளிரவில் ஒரு பெண் நடந்து செல்லும் அளவுக்கு பாதுகாப்பு இருக்கிறதே இது தான் பெண் விடுதலை! உள்ளாட்சி தொடங்கி குடியரசுத் தலைவர் வரை இன்று பெண்கள் இருக்கின்றனர் என்றால் அதற்க்கு வித்திட்டது யார் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். பெண்கள் இல்லாத துறை இன்று இல்லை. கல்வி அத்தனையையும் மாற்றியிருக்கிறது. அரும்பாடுபட்டு அடைந்த இந்த உயர்நிலையைச் சீரழிக்க பல சாதி இயக்கங்களும், மத அமைப்புகளும் முயலுகின்றன. அவற்றுக்கு நாம் இடம்கொடுக்கக் கூடாது. பெண்கள் இன்னும் முன்னேற வேண்டும். 

இப்போது பல மாறினாலும் முகத்திரை அணியச் சொல்லும் இஸ்லாம் மதம் பெண்களை இன்னும் போகப்பொருளாகவே வைத்திருக்கிறது. மாதவிடாயின் போது பெண்களை ஒதுக்கி வைக்கிறதே இந்து மதம். அது போல இன்னும் இருக்கும் பல கொடுமைகள் மாற வேண்டும்.பெண்கள் அர்ச்சகர்கள் ஆக வேண்டும். மதத்தலைமை ஏற்க வேண்டும். இன்னும் பலப்பல! (மதம் ஒரு பொருட்டில்லை எமக்கு என்றாலும் அந்தப் பொறுப்பிலும் பெண்கள் அமர வேண்டும் என்பது அவா!)

Comments

Popular posts from this blog

ஊடலும் ஊடல் நிமித்தமும்

தண்பொருநை தொடர் -1

முகைத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்