இகழ்தலும் இலமே

பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192) - கணியன் பூங்குன்றனார்

இங்கே ஒரு பிரச்சினை பல பிரச்சினைகளுக்கான விதையாகிவிடுகிறது. #நாச்சியாரை நடுவீதியில் நிறுத்தி நாறடித்துவிட்டார்கள். #போகட்டும். #அதையே சாக்காக வைத்து நம்முடைய வெறுப்பையெல்லாம் உமிழ்வது என்பது அபத்தமானது, ஆபத்தானது. தமிழ்பேசும் பார்ப்பனர்களை(பிராமணர்களை)  ஒட்டுமொத்தமாக குற்றஞ்சுமத்துவது என்பதும் தவறான ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.
சமுக நீதிக் கருத்துக்களை, திராவிடச் சிந்தனைகளை ஒருங்கே கொண்டவர்களும் பார்ப்பனர் வகுப்பிலிருந்து வந்திருக்கிறார்கள்.

சமீபத்திய உதாரணமாக டி.எம்.கிருஷ்ணா அவர்களைக் கூறலாம். எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் மூலம் பல தமிழ்க்கீர்த்தனைகளை எழுதச் செய்து அவற்றை மேடையேற்றிவருகிறார். கருநாடக இசையை ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மட்டும் பயின்று பயிற்றுவித்துக் கொண்டிருக்கும் நிலையை மாற்ற பெருமுயற்சி எடுத்து வருகிறார். அண்மையில் பேருந்தில் பரதநாட்டியத்தை அரங்கேற்றம் செய்ய வைத்து வெகுமக்கள் கலையாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இது ஒரு சான்று தான்.

இந்து என்.ராம் அவர்களையும் ஒரு உதாரணமாக சொல்லலாம். பத்திரிகைகள் எல்லாம் பெரியாரையும் அண்ணாவையும் இடதுசாரித் தலைவர்களையும் பெருவாரியாக எழுதி மக்களிடையே சென்று சேர்க்கிறார். திராவிட இயக்கங்களே கண்டுகொள்ளாமல் விட்ட முத்தருணங்களின் ஒன்றுகூடலில் 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்' புத்தகத்தை வெளியிட்டதைக் கூறலாம்.

நான் பார்த்த மற்றுமொரு மிக அண்மைய உதாரணம் - ஞாநி சங்கரன்.
சாகுவதற்கு ஆறு மணிநேரம் முன்பு கூட சமூகநீதிக்கு ஆதரவாக குரலெழுப்பி விட்டே இறந்திருக்கிறார். அவரும் ஒரு பார்ப்பனர் என்றால் பலரும் நம்புவது சந்தேகம்.

ஆகவே, தரக்குறைவான வகையில்'மீம்ஸ் போடுவது நல்லதல்ல' - அது தமிழர் நெறியுமல்ல. எல்லா இடத்திலும் நல்லவரும்‌ இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். பார்ப்பனரில் ஒரு கால்பாகமாவது தெளிந்த அறிவு கொண்ட வருணாசிரமத்தை கைக்கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் இங்கே ஒப்புக்கொள்ளத்தான் வேணும். ஒரு காலத்திலே பார்ப்பனீயத்தால் நிகழ்ந்த வன்கொடுமைகள் ஏராளம் அதை மக்களுக்கு நல்ல முறையில் எடுத்துச் சொல்ல வேண்டுமே தவிர இந்த 'வேலை' நல்லதாகப் படவில்லை.
நான் முதலில் மேற்கோள் காட்டிய புறநானூற்று வரி இங்கே இந்தச் சூழலுக்கே பொருந்தும்.

எச்.ராஜா பற்றி ஊருக்கே தெரியும். அவர் பேசியது மிகவும் அசிங்கமான முறையில் இருந்தது- அவர் தண்டிக்கப்பட வேண்டியவர். அதற்காக அவர் சொல்வது போலேயே நாமும் சொன்னால்?! பார்ப்பனர்‌ அனைவரும் பக்தாள் அல்ல. பக்தாள் அனைவரும் பார்ப்பனரும் அல்ல.
#அவன் சொல்லுதானு நாமும் பதிலுக்கு அசிங்கமாக பேசினால் நமக்கான மரியாதை தான் என்ன?

#தமிழராய் ஒன்றுபடுவோம் #சமூகநீதி #சமத்துவம் #சமதர்மம் நிலைக்கட்டும்
#வாழ்க தமிழ்நெறி

Comments

  1. அழகு...மிக முக்கியமாக.. எச் ராஜா பற்றிய பத்தி....புரியட்டும் பலருக்கு...
    விழுகின்ற மழைத்துளி அனைத்தும் சாக்கடைக்கு அல்ல...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஊடலும் ஊடல் நிமித்தமும்

தண்பொருநை தொடர் -1

முகைத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்