Posts

வண்டிமறித்தம்மன் கோவில் கொடை

Image
வண்டிமறிச்சம்மன் கோவில் கொடை! பல விதமான தெய்வங்களைக் கொண்டது எங்கள் நெல்லை மாவட்டம். ஊர் பெயர்களை விட தெய்வங்களின் பெயர்கள் அதிகம்! ஊருக்கு நாலு பெயர் கொண்ட தெய்வம். ஒவ்வொன்றிற்கும் ஓர் கர்ண பரம்பரைக் கதை. அப்படியாக எனக்கு அறிமுகமான பிரம்மாண்ட தெய்வம் தான் அம்பாசமுத்திரம் வண்டிமறித்த அம்மன் - பிரம்மாண்டம் என்றால் எதோ தஞ்சை பெரிய கோவில் போல எண்ணக்கூடாது; உருவத்தில் நான் பார்த்த முதல் பெரிய தெய்வம். அம்மன் என்று பொதுவில் அழைக்கப்பட்டாலும் ஒரு அம்மாளும் ஒரு சாமியுமாக இருவருடைய நிலையம் தான் அது. பல நாட்கள் மண் மேடாக கிடந்த இடத்தில் ஒரு அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு அம்பைக்கு சென்ற போது ஓலைத் தட்டி வைத்து மறைக்கப்பட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. ஆச்சியிடம் கேட்டதற்கு 'இந்த வருசம் வண்டி மறிச்சம்மங்கோயில் கொடை உண்டுலா அதுதான் வேளார் வந்து அம்மாளைச் செய்தாரு. அந்த அம்மா நான் வெயில்லயும் மழையிலயும் கிடக்கனும், ஒவ்வொரு கொடைக்கும் என் நிலையத்தை திருப்பிச் செய்யனும்னு சொன்னுச்சாம்' என்றாள். எப்படி மண் உருவம் செய்து கோவிலில் நேர்ந்து விடுவார்களோ அதேபோல அந்த வண்டி மறிச்சம்மன் மண் மேடு என்பதி

வகுப்பின் கடைசி நாள்

Image
 நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டன வகுப்பறையை விட்டு வந்து. இன்னும் படிப்பிற்கான தாகம் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. என்ன தான் இன்று Self learning ஆன்லைன் வகுப்புகள் இருந்தாலும் ஒரு ஆசிரியர் நடத்தும் வகுப்பறைக்கு ஈடு இல்லை. அதை இப்போது நான்றாகவே உண்ரந்து இருக்கிறேன். ஏதேதோ படிக்கப் போய் அதில் எதுவுமே வெற்றி அடையவில்லை. கடைசியாக சேர்ந்தது ஜெர்மன் மொழி வகுப்பறையில். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட அனுபவம். அடுத்த தலைமுறை வகுப்பிற்குள் நுழைந்ததைப் போல இருந்தது.  ஒரு நாளும் என் வாழ்நாளில் இப்படி மடிக்கணினியில் பயில்வேன் என சிறுவயதில் நினைத்திருக்கவே இல்லை. பொட்டக்காட்டில் பட்டிக்காட்டில் இருந்த நமக்கு அதெல்லாம் எட்டாக்கனி தானே! அதை விடுங்கள். வகுப்புக்கு வருவோம். மும்பை கோத்தே இன்ஸ்டிடுட் (Goethe Institut) இல் ஏ1 ஜெர்மன் மொழிப்பாடத்தில் ஆன்லைன் வழி வகுப்பில் இணைந்து இத்தோடு நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இவர்களது வகுப்புகள் பயிற்சி முறைகள் நன்றாகவே இருந்தன. ஆனால் என்ன நமது சொந்த முயற்சியும் பயிற்சியும் கட்டாயம் தேவை. அதுவும் மொழியைக் கற்றுக் கொள்ள பயிற்சியே பிரதானம் மற்றவையெல்லாம் ஊறுகாய் போலவ

தீபாவளி - தமிழர் விழாவா?

Image
தீபாவளி - திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கும் பகுத்தறிவாளர்களுக்கும் என்றுமே சர்ச்சைக்குரிய ஒரு விழா ஆகும். இந்த பண்டிகை குறித்து பல கதைகள் சொல்லப்பட்டாலும் அது எதற்குமான உறுதியான சான்றுகள் என்பது இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இந்து என்று சொல்லப்படக்கூடிய மதத்தின் பல பிரிவுகளை சேர்ந்த மக்களும் சமண மதத்தைச் சார்ந்தவர்களும் இதை கொண்டாடுகின்றனர். அத்தோடு சில இடங்களில் தீபாவளிக்கு முன்பு பின்பு வேறு சில பூஜைகள் போன்ற விழாக்களும் சேர்ந்து கொள்கின்ற காரணத்தினால் நம் நாட்டின் பெரிய திருவிழாவாக அடையாளம் காணப்படுகிறது. நாடு முழுமைக்கும் கொண்டாடப்படுவதாக தீபாவளி சொல்லப்பட்டாலும் அது உண்மையில் வட இந்திய பண்டிகையே!  பல்வேறு நாடுகளில் தீபம் ஏற்றும் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்தியாவிலும் அதே போன்ற தீபம் ஏற்றக்கூடிய பண்டிகை தான் தீபாவளி; ஆனால் அது வட இந்தியாவில். மேலும் ஒரு தீபம் ஏற்றும் பண்டிகை தென்னிந்தியாவில் கொண்டாடப்படுகிறது - அது திருக்கார்த்திகை தினத்தில்! தமிழகம், கேரளம், ஆந்திரம், தென் கர்நாடகம் மற்றும் ஒடிசாவில் திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்றப்படுகிறது. வடகர்நாடகத்திலும் மற்ற இந

கைத்தறி தினம்'22

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு! தெங்காசி யானைப்பாலம் அருகிலுள்ள ஒரு உணவகம்;  சாப்பிட உக்கார்ந்திருந்தோம். இட்டிலி, தோசையும் வைத்து விட்டு பேச்சு கொடுத்தார் உரிமையாளர். அவாள் சைவாள்.  'எந்த ஊரு?' என்றார்.  'சங்கரன்கோவில்' என்று சொல்லவும் சற்று மேலும் கீழூம் பார்த்து விட்டு 'பசைக்கஞ்சி'யா? என்றார்.  புரிந்திருக்கும் அவர் என்ன நோக்கில் இதைக் கேட்டிருப்பார் என்று! எங்கய்யா கைத்தறி கதர் வேட்டி தான் உடுத்தியிருந்தார்.   சற்றும் தாமதிக்காமல் 'ஆமாய்யா நீரு கட்டிருக்கீருல்லா வேட்டி அதுவும் இந்த பசைக்கஞ்சி நெஞ்சது தான்!' என்றார் எங்க அய்யா.  அவாள் வாயடைத்துப் போய்ட்டார். பிறகு ஒன்றும் சொல்லவில்லை!  இதை ஏன் சொல்ல வந்தேன் என்றால் இங்கே உடுத்தும் உடைகளை வைத்தே அவர்களை இன்ன சாதி என்று பேதம் பார்ப்பது தொடர்கிறது. வெள்ளை வேட்டி உடுத்துவோர் உயர்ந்த சாதிக்காரர்களாகவும் கலர் வேட்டி உடுத்துவோர் தாழ்ந்தவர்களாகவும் எண்ணுவது இன்னும் தொடங்குகிறது!  இருந்தாலும் நம்மை ஏன் நாம் தாழ்த்திக்கொள்ள வேணும். நமக்கு பிடித்ததை உடுத்துவோம். கலர் இல்லையென்றாலும் வெள்ளை வேட்டியாவது உடுத்துவோம்!

ஆச்சியும் கொடையும்!

இன்றைக்கு இருக்கும் சிறார்களுக்கு எல்லாம் எங்களைப் போன்ற ஒரு இளம் பருவம் கிடைத்திருக்குமா என்றால் அது ஐயமே! ஒவ்வொரு விடுமுறையின் போதும் ஆச்சி வீட்டுக்கு செல்வதோ அத்தை வீட்டுக்கு செல்வதோ சித்தப்பா வீட்டிற்கு செல்வதோ அக்கா வீட்டிற்கு செல்வதோ மிகவும் அலாதியான ஒரு அனுபவம்.  திறன்பேசி எல்லாம் அறிமுகமாகி இருக்காது அந்த காலகட்டத்தில் எங்களது இளம் பருவம் எந்தவித கவலையும் இன்றி துள்ளி பறந்து திரியும் ஒரு பறவையைப் போல தான் இருந்தது.  இன்றைக்கு இருப்பதை போல கோடிங் வகுப்புகளோ திறன் வகுப்புகளோ கோச்சிங் வகுப்புகளோ இல்லாத விடுதலை காலம் அது.  காலையிலேயே இட்லியோ சோறோ பொங்கி எடுத்துக்கொண்டு ஆற்றில் குளித்து மத்தியானம் வெயிலில் பாறையில் அமர்ந்து நாங்கள் உணவருந்திய அந்த நாட்கள் எல்லாம் இப்பொழுது நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு முறை வண்டி மறிச்சான் கோவில் கொடைக்கு செல்லும் பொழுது சம்படத்தில் அடைத்து தரும் கொழுக்கட்டையை நினைக்கும் போது நாக்கில் எச்சில் ஊறுகிறது. ஒரு நாள் அட்டெண்டன்ஸ் போயிரும் என்று சாயந்தரம் கிளம்பி சென்று மறுநாள் காலை முதல் பஸ் ஏறி காலை 9 மணிக்கு பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி விடுவாள் அம்மை. இ

கருப்பர் கூட்டம் சரியா தவறா?

இன்று மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. கருப்பர் கூட்டம் குழுவினர் வெளியிட்ட கந்தர் சஷ்டி கவசம் தொடர்பிலான காணொளியின் வாயிலாக பிரச்சனை வெளிப்பட்டிருக்கிறது. எத்தனையோ நபர்கள் இந்துமத இதிகாச புராணங்களை பற்றி விமர்சித்து பேசியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள், எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். பெரிய அளவிலான எதிர்ப்பு என்பதோ, வெறுப்பு என்பது மக்களிடம் எழுந்தது கிடையாது. சில நேரங்களில் திட்டமிட்டு வெளிப்படுவதும் உண்டு எனினும் கவனம் பெறுவது குறைவு. கந்தர் சஷ்டி கவசம் தொடர்பிலான இந்த காணொளி பிரச்சனைக்கு வித்திட்டதற்கு மாரிதாஸ் மட்டுமே காரணம் அல்ல. ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இனக்குழுவினரின் செண்டிமெண்டல் தொடர்பான பொருட்களில் கைவைக்கும் பொழுது சில நேரங்களில் கடி படுவதும் உண்டு. அதுதான் இப்பொழுதும் நிகழ்ந்திருக்கிறது. இராமரை அன்றாடம் விமர்சனம் செய்கிறோம். அதற்கு அவ்வளவு எதிர்ப்பு கிளம்புகிறது? என்றால் இல்லை என்பதுதான் தெளிவான பதில். அப்படி இருப்பின் முருகர் விஷயத்தில் எப்படி இவ்வளவு எதிர்ப்பு கிளம்பிற்று? இராமர் தமிழருடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டவர் அல்ல. முருகரோ அதற்கு நேர

ஜூம் புரட்சி

Image
ஞாயிற்றுக்கிழமை அன்றே இதை எழுத வேண்டுமென்று எண்ணினேன். வேறு வேலை வந்து விட்டதால் முடியவில்லை.  ஜூம் செயலியின் வாயிலாக இலண்டனில் வசிக்கும் சிவசுப்பிரமணியம் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை எனது நண்பர் திரு சிறீராம் அநக்ஸ் மற்றும் சசி அவர்களின் Bibliotheca - இணைய தமிழோசை அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.  ஏறத்தாழ ஒரு 25 பேர் கலந்து கொண்டிருந்தனர்.  திரு சிவசுப்பிரமணியம் அவர்கள் குரல் போட் ( Kural bot)^¹ எனப்படும் இணையப் பயன்பாட்டை ஏற்படுத்தியவர். இதன் மூலம் நீங்கள் வேண்டுகிற திருக்குறளைப் பக்கம் திருப்பி தேட வேண்டிய தேவை இல்லை. அந்த முகநூல் பக்கத்தில் உள்ள Messaging option ல் சென்று குறளுக்குரிய வரிசை எண்ணை மட்டும் அனுப்பினால் போதும். அந்த எண்ணிற்குரிய குறள் உங்களுக்கு செய்தியாக உடனடியாக வரும். விரிவான விளக்கத்திற்காக கீழே படத்தை இணைத்துள்ளேன்.  மேலும் அன்றில் டாட் இன் ( andril.in )^² என்ற இணையதளத்தின் மூலமாக சங்கப்பாடல்களை பல தலைப்புகளின் கீழ் தமிழ் படிக்காதவர்களும் எளிதாக பார்க்கும் வகையில் கொடுத்திருக்கிறார். அது பெரிய புத்தகங்களைத் தேடி திருப்புவதற்கு பதிலாக மிக எளித